Home » புத்தாண்டு காலத்தில் செலானின் அற்புதமான சலுகைகள்

புத்தாண்டு காலத்தில் செலானின் அற்புதமான சலுகைகள்

by Damith Pushpika
April 21, 2024 6:27 am 0 comment

இதயபூர்வமான கொண்டாட்டங்களை ஊக்குவிக்கும் கருப்பொருளுக்கு ஏற்ப, அத்தியாவசிய தேவைகளுக்கான இன்றியமையாத அட்டையாக, செலான் அட்டைகள் அதன் மதிப்புமிக்க அட்டை வாடிக்கையாளர்களுக்கான அற்புதமான சலுகைகளை அறிவித்தது.

இவ்வாண்டு, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் புதுவருட அனுபவத்தை மேம்படுத்த செலான் அட்டைகள் உறுதி பூண்டுள்ளது. 300இற்கும் மேற்பட்ட வணிகர்களுடன் இணைந்து 50% வரையான சலுகையை வழங்குவதால், அட்டை வாடிக்கையாளர்கள் ஆடைகள், காலணிகள், accessories, பல்பொருள் அங்காடியில் அத்தியாவசியப் பொருட்கள், கண் பராமரிப்பு தொடர்பான தீர்வுகள் என பலதரப்பட்ட பிரிவுகளில் மகிழ்ச்சிகரமான ஷொப்பிங்கில் ஈடுபடலாம்.

இவ்வருட கொண்டாட்டத்துக்கு செலான் அட்டைகள் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் Softlogic Brands, Cool Planet, Fashion Bug, CIB, Hameedia, DSI, Velona மற்றும் Thilakma போன்ற வணிகங்களுடன் கைகோர்த்துள்ளது. இந்த வணிகர்கள் தங்கள் பிரத்தியேக சலுகைகளை online தளங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளமையால் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் பணமற்ற ஷொப்பிங் அனுபவத்தை உறுதி செய்கிறது.

மேலும், செலான் அட்டைகள் டிசம்பர் 31, 2024 வரை சூரிய மின்சக்தி தீர்வுகள், பாடசாலைக் கட்டணங்கள், காப்பீடு மற்றும் சுகாதாரப் பிரிவுகளுக்கு 0% இலகு கட்டணத் திட்ட தெரிவுகளை வழங்குகிறது. இது அட்டை வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்குகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division