200பில்.ரூபாவை ஒதுக்கியது அரசாங்கம்
நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் அதற்கான செயற் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் ஒரு குடும்பத்திற்கு 7,500 - -10,000ரூபா வீதம் நிதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்...
எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையே நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விரிவாக...
தபால் திணைக்களம் அதிரடி நடவடிக்கையில்
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் தபால் ஊழியர்களுக்கு எதிராக பணியிலிருந்து விலகியதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி...
இன்றைய நிலையில் நாட்டில் சுமார் 15,000இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக, மருந்துகள் மற்றும்...
தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை
எரிபொருள் பற்றாக்குறை உச்சநிலையில் உள்ளதால் தனியார் பஸ்கள் எதிர்வரும் நாட்களில் 5சதவீதமளவிலே சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ...