Home » நம்பிக்கையுடன் வாகனத்தினை செலுத்த அனுமதிக்கும் NDB லீசிங்

நம்பிக்கையுடன் வாகனத்தினை செலுத்த அனுமதிக்கும் NDB லீசிங்

by Damith Pushpika
April 21, 2024 6:26 am 0 comment

NDB லீசிங் ஆனது தனது அண்மைய லீசிங் ஊக்குவிப்பான “NDB ஆட்டோ கார்னிவல்” வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இத்திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கனவு நனவாகும் வகையில் வாகனங்களை இலகுவாகவும் வசதியுடனும் குத்தகைக்கு [லீசிங்கிற்கு] பெறுவதற்கான அருமையான வாய்ப்பை வழங்கியது.

ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 05 வரை தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், NDB Leasing தனது பரந்த அளவிலான லீசிங் தெரிவுகளை காட்சிப்படுத்தியதுடன், பங்கேற்பாளர்களுக்கு சில நம்பமுடியாத நன்மைகளையும் வழங்கியது.

இந்நிகழ்வின் போது, ​​வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட திருப்பிச் செலத்தும் வசதிகளுடனான திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்தறியும் வாய்ப்பைப் பெற்றனர்.

NDB லீசிங் ஆனது இதன் மூலம் உத்தரவாதமளித்தலின்றியும் அதிக முன் பணம் செலுத்தும் தேவையின்றியும் நியாயமான விலையில் வாகனங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்கியதால் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இத்திட்டமானது அமைந்திருப்பதை உறுதி செய்தது. போட்டித்திறனுடன் குறைந்த வட்டி வீதங்கள் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகன லீசிங்கில் சிறந்த ஒப்பந்தங்களைப் பெற முடியும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division