Home » One Galle Face Mall இல் ‘SOS Wonder Village’

One Galle Face Mall இல் ‘SOS Wonder Village’

by Damith Pushpika
May 5, 2024 6:41 am 0 comment

கொழும்பு One Galle Face Mall உடன் கைகோர்த்து இலங்கை SOS சிறுவர் கிராமங்கள், SOS Wonder Village நிகழ்வை முன்னெடுத்திருந்தது. தேவைகளைக் கொண்ட சிறுவர்களின் நலனுக்காக நிதி திரட்டுவது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது அமைந்திருந்தது.

SOS Wonder Village நிகழ்வு கொழும்பிலுள்ள One Galle Face Mall இல் மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் ஏப்ரல் மாதமுற்பகுதி வரை வார இறுதி நாட்களில் நான்காம் மாடியிலுள்ள Playscape பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த காலப்பகுதியில், 1000க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் SOS Wonder Village இல் இணைந்து, களிப்பான விநோத அம்சங்களில் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததனூடாக விநோத அம்சங்களை அனுபவித்தது மட்டுமன்றி, சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளையும் வழங்கியிருந்தனர்.

சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான வர்ணம் பூசும் அமர்வுகளை விருந்தினர்கள் அனுபவித்திருந்தனர். சிங்கிதி அவுருது குமார மற்றும் குமாரிய தெரிவும் நடைபெற்றது. பல உள்ளக விளையாட்டுகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டன. SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மாதாந்த அல்லது வருடாந்த செலவுகளுக்கான தொகையை அனுசரணை வழங்குவதற்கான வாய்ப்பு பங்குபற்றுநர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division