Home » சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில்​ உயரும் சுற்றுலா விசா கட்டணங்கள்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில்​ உயரும் சுற்றுலா விசா கட்டணங்கள்

by Damith Pushpika
April 21, 2024 6:38 am 0 comment

அரசாங்கம் சுற்றுலா விசாவுக்கான கட்டணத்தை 100%க்கு மேல் அதிகரித்துள்ளது, சுற்றுலா விசா வழங்கும் நடைமுறையும் உலகளாவிய செயலாக்க நிறுவமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை விடுக்கப்பட்டது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதிய விசா நடைமுறைகளை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. மற்றும் இணையவழியில் சுற்றுலா விசா வழங்கும் நடைமுறையையும் அறிமுகப்படுத்தியது.

எவ்வாறாயினும், வெளிநாட்டவர்களுக்கான சுற்றுலா விசா வழங்கும் செயற்பாடுகள் உலகளாவிய செயலாக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதன் விளைவாக விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை, விமர்சனங்களையும் உண்டுபண்ணியுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு இணையம் மூலம் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு வசதியாக சர்வதேச முகவர்களை நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்க, கடந்த செப்டம்பர் 11 அன்று, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்பின்னர், டிசம்பர் 11 அன்று, GBS டெக்னோலஜி சேர்வீசஸ் மற்றும் IVS Global – FZCO மற்றும் VFS VF Worldwide Holdings Ltd ஆகியவற்றுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதன் பிரகாரம் இந்த நிறுவனங்கள், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினரின் சார்பாக விசா விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ முகவர்களாகப் பணியாற்றும்.

புதிய முறையின் கீழ், சார்க் அல்லாத நாடுகளுக்கு ஒவ்வொரு தங்குகையின்போதும் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசா கட்டணம், இனிமேல் 60 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், $ 18.5 சேவை கட்டணம் மற்றும் $ 7.27 வசதிக் கட்டணம் உட்பட கூடுதல் கட்டணங்களுடன், மொத்த தனிநபர் விசா கட்டணம் $100.77 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சார்க் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் விசா கட்டணம் $ 20 இல் இருந்து $ 35 ஆக அதிகரித்துள்ளது; சிங்கப்பூர், மாலைதீவு, செக் குடியரசு மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளாலும் சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை சுற்றுலாத்துறைக்கு இந்த சீரக்கல் முக்கியமானதாக அமைந்துள்ளது.

குடிவரவுத் திணைக்களத்தின் முந்தைய ETA முறைமை அதன் எளிமைக்காக உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் பாராட்டைப் பெற்றது.

2024ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், 2.3 மில்லியன் வருகைகள் மற்றும் 4 பில்லியன் டொலர் வருமானம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, விசா கட்டணங்களின் அதிகரிப்பு துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு சவால்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்களும் நிலவுகின்றன.

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில், இலங்கை மொத்தம் 82,531 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்றது, இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் 718,315 ​வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தனர்.

பொருளாதார மீட்சியை நோக்கி இலங்கை தனது பயணத்தைத் தொடர்வதால், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும் வருமானத்தை ஈர்ப்பதற்கும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் இடையில் சமநிலையைக் கண்டறிவது முக்கியமானதாக இருக்கும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division