Home » சிறந்த நிதிசார் வலிமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி புதிய நியமங்களை ஏற்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

சிறந்த நிதிசார் வலிமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி புதிய நியமங்களை ஏற்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

by Damith Pushpika
April 21, 2024 6:38 am 0 comment

2023 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அதிசிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தினகரன் பத்திரிகையுடன் மேற்கொண்டிருந்த நேர்காணலின் போது பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா ஆகியோர், இந்த அதிசிறந்த பெறுபேறுகளை எய்தியதில் பங்களிப்புச் செய்திருந்த காரணிகள் மற்றும் பங்காளர்களுக்கான தூர நோக்குடைய கடப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்த நேர்காணலை கீழே வாசிக்கலாம்:

கேள்வி: காப்புறுதிதாரர்களுக்கு 13.5% எனும் உயர் பங்கிலாபத்தை அறிவித்திருந்ததில், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நோக்கம் யாது?

ஆம், யூனியன் 2023 ஆம் ஆண்டுக்காக காப்புறுதிதாரர்களுக்கான பங்கிலாபமாக 13.5%எனும் தொகையை அறிவித்திருந்ததையிட்டு பெருமை கொள்கின்றது. சவால்கள் நிறைந்த ஆண்டை கடந்து வந்த நிலையில், அவ்வாறான சூழலில் இயங்கக்கூடிய ஆற்றல் மற்றும் அதனை பின்பற்றும் திறன் ஆகியவற்றை யூனியன் அஷ்யூரன்ஸ் வெளிப்படுத்தியிருந்தது. பல்வேறு வழிகளில் இந்த சாதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. முதலாவதாக, உயர் பொருளாதார தளம்பல்கள் காணப்பட்ட போதிலும், அவ்வாறான உயர்ந்த பெறுமதியை வழங்குவதற்கான எமது ஆற்றலினூடாக, எமது பங்காளர்களுக்கு உயர்ந்த பெறுமதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் காண்பிக்கும் ஒப்பற்ற அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக, கடந்த தசாப்த காலத்தில் உயர்ந்த பெறுமதியாக இந்த பங்கிலாப வீதம் அமைந்துள்ளது. பெருமளவு சவால்கள் நிறைந்த சூழலிலும், எமது மீட்சி மற்றும் உறுதியான முன்னேற்றத்துக்கான எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. மேலும், இந்த பங்கிலாப செலுத்துகையானது, எமது காப்புறுதிதாரர்களின் நிதியத்தின் வளர்ச்சியில் நேரடியாக பங்களிப்பு செலுத்துவதுடன், இந்த நிதியத்தின் பெறுமதி 2023 ஆம் ஆண்டின் நிறைவில் 64.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. அதனூடாக அவர்களின் நிதிசார் நலன் மேம்படுத்தப்படுகின்றது. எம்மீது எமது காப்புறுதிதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்காக நாம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், இந்த சிறந்த பெறுபேறுகளை எய்துவதில் எமது முதலீட்டு மூலோபாயங்கள் முக்கிய பங்காற்றியிருந்தன. எமது காப்புறுதிதாரர்களுக்கு நிண்ட கால நிலையான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எமக்கு வாய்ப்பளித்திருந்தன. 32% – 33% எனும் உயர்ந்த பெறுமதிகளை எய்தி, வழமைக்கு திரும்பியிருந்த வட்டி வீதங்கள் கடும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரத்தில், இந்த ஏற்ற இறக்கங்களின் அனுகூலங்களை காப்புறுதிதாரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் காண்பித்திருந்த அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டுக்காக ஆகக்குறைந்த உத்தரவாதமளிக்கப்பட்ட பங்கிலாப வீதமாக 10% ஐ அறிவிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். அதனூடாக எமது காப்புறுதிதாரர்களுக்கு தொடர்ச்சியான நிதிசார் சுபீட்சத்தை உறுதி செய்து, உயர் பெறுமதியை பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளோம். நாம் முன்னேறிச் செல்கையில், எமது காப்புறுதிதாரர்களுக்கு நேர்மை, புத்தாக்கம் மற்றும் அவர்களின் நிதிசார் நலனுக்காக ஒப்பற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக செயலாற்றுவோம்.

கேள்வி: முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் காப்புறுதிதாரர்களுக்கான தற்போதைய பங்கிலாப வீதம் எவ்வாறு அமைந்துள்ளது மற்றும் நிறுவனத்தின் நிதிசார் நிலை மற்றும் உறுதித்தன்மை தொடர்பில் எதனை உணர்த்துகின்றது?

நாம் வழங்கும் பங்கிலாப வீதம் என்பது, எமது நீண்ட கால நிலைபேறான முதலீட்டுக் கொள்கைகள் மற்றும் சந்தை நிலைமைகள் போன்றவற்றினூடாக நாம் பெற்றுக் கொண்டுள்ள வருமதிகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, கடந்த தசாப்த காலப்பகுதியில் நாம் செலுத்தியுள்ள மிகவும் உயர்ந்த பங்கிலாபங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. அதிகரித்துச் செல்லும் சந்தை பெறுமதிகள், திறைசேரி பிணை பெறுமதிகள் மற்றும் பங்குச் சந்தையின் போக்குகள் போன்ற தளம்பல்கள் நிறைந்த சூழலில் இயங்கக்கூடிய எமது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. எமது முதலீட்டு வழிமுறை என்பது சமப்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளது. எமது காப்புறுதிதாரர்களின் நிதிப் பாதுகாப்பு என்பதில் மட்டும் முன்னுரிமை வழங்காமல், கவனம் செலுத்தாமல், அவர்களுக்கு வழங்கும் வருமதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றோம்.

பங்கிலாப வீதம் மற்றும் பெறுபேறு போன்றன நிறுவனத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கான சக்தி வாய்ந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளதுடன், எமது பெறுமதி வாய்ந்த காப்புறுதிதாரர்களுக்கு நிதிசார் உறுதித்தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாம் சேவையாற்றுவோரின் நிதிசார் நலனை பேணி மேம்படுத்துவதில் எமது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

கேள்வி: நிதிப் பெறுபேறுகள் மற்றும் பரந்த வியாபார இலக்குகள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளை கவனத்தில் கொண்டு, நிறுவனத்தின் நிதிசார் மூலோபாயங்கள் மற்றும் நீண்ட கால வியாபார இலக்குகள் போன்றவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை எந்தப் பொறிமுறைகள் உறுதி செய்கின்றன?

எமது காப்புறுதிதாரர்கள், பங்குதாரர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அணி அங்கத்தவர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் அடங்கிலாக சகலருக்கும் பெறுமதி உருவாக்கம் என்பதில் நாம் பிரதானமாக கவனம் செலுத்துகின்றோம். இந்த பிரதான அரண்கள் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான எமது பொறிமுறைகள் பன்முகப்படுத்தப்பட்டவையாகும். முதலாவதாக, மூலோபாய திட்டமிடல் அமர்வுகளில் இந்த ஒவ்வொரு அரண்களுக்குமான எமது நீண்ட கால இலக்குகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, நிலைபேறான வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மை ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்காக எமது நிதிசார் தீர்மானங்களில் பங்களிப்பு வழங்குவது. இரண்டாவதாக, நிதிசாரா ஏற்பாடுகள் தொடர்பில் பல்வேறு நிதிசார் குறிகாட்டிகள் தொடர்பான அளவுகோல்களின் வினைத்திறனை நாம் கவனமாக கண்காணித்து, எமது இலாபம் மற்றும் பரந்தளவு தாக்கத்தை மேம்படுத்துவதாக எமது மூலோபாயங்கள் அமைந்திருப்பதை உறுதி செய்வது. மேலும், எமது நீண்ட கால இலக்குகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் எமது கடுமையான இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் பங்களிப்பு வழங்குகின்றன. எமது மூலோபாய முன்னுரிமைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்னுரிமையளித்து, நிறுவனத்தினுள் பெறுமதி உருவாக்கத்தை நாம் கட்டியெழுப்புகின்றோம். தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பின்பற்றல் போன்றன மாறிவரும் சந்தை போக்குகளுக்கேற்ப செயலாற்றக்கூடிய வகையில் எம்மை நிலைநிறுத்தியுள்ளதுடன், நீண்ட கால அடிப்படையில் வெற்றிகரமான பெறுபேறுகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது நிதிசார் மூலோபாயங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது தொடர்பில் எமது பங்காளர்களுடன் வெளிப்படையாக தொடர்பாடல்களையும் பேணுகின்றோம்.

கேள்வி: மொத்த பங்குதாரர் பங்கிலாபமாக ரூ. 5 பில்லியனுக்கு அதிகமான தொகையை யூனியன் அஷ்யூரன்ஸ் அறிவித்துள்ளது. தொழிற்துறை நியமங்களுக்கேற்ப இது எவ்வாறு அமைந்திருப்பதுடன், பங்காளர்களுக்கு எவ்வாறானதாக அமைந்திருக்கும்?

எமது நிலைப்பாட்டின் பிரகாரம், இந்த பிரகடனத்தை வரவேற்பதற்கான அனைத்து காரணங்களையும் பங்குதாரர்கள் கொண்டுள்ளனர். எமது செயற்பாடுகளின் சகல அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, பரிபூரண பங்காளர் வழிமுறையை நாம் பின்பற்றுகின்றோம். மொத்தமாக ரூ. 5.2 பில்லியன் பெறுமதியான பங்குதாரர்கள் பங்கிலாபம், பங்கொன்றுக்கு சுமார் ரூ. 8.75 வீதம் என்பது, எமது பங்குதாரர்களுக்கான பெறுமதி உருவாக்கத்தை மேம்படுத்துவது என்பதில் எமது அர்ப்பணிப்பான செயற்பாட்டை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. எமது காப்புறுதிதாரர்களுக்கான பங்கிலாப வீதம் 13.5% எனும் உயர்ந்த பெறுமதியாக அமைந்துள்ளது, கடந்த தசாப்த காலப்பகுதியில் பதிவாகிய உயர் பெறுமதியாக அமைந்துள்ளது. சகல பங்காளர்களுக்கும் பெறுமதி உருவாக்கத்துக்கான எமது உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட சகல பங்காளர்களுக்கும் பரஸ்பர அனுகூலமளிக்கும் சமநிலையான வழிமுறையை உறுதி செய்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாம் தொடர்ச்சியாக முயற்சி செய்கின்றோம்.

பல்வேறு காரணிகள் மற்றும் எதிர்கால எதிர்வுகூரல்கள் போன்றவற்றை கவனமாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்படுகின்றன. அதனால் இவை தவறாகிவிட முடியாது. எமது பங்காளர்களின் நிலைபேறான சுபிட்சத்தை உறுதி செய்வதற்காக இந்த ஏகாந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. பொறுப்புவாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் மற்றும் நீண்ட கால நிலைபேறாண்மை ஆகிய பெறுமதிகளை உருவாக்குவதில் எமது அர்ப்பணிப்பை இவை உறுதி செய்கின்றன. பங்குதாரர்கள் மற்றும் காப்புறுதிதாரர்களின் ஈடுபாடுகளுக்கு முன்னுரிமையளித்து, சந்தையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற நிறுவனம் எனும் எமது நிலையை நாம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

கேள்வி: பிரதான நிதிசார் விகிதங்கள் மற்றும் வினைத்திறன் குறிகாட்டிகள் போன்றவற்றில் பங்குதாரர் பங்கிலாப வீதம் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான விளக்கத்தை உங்களால் வழங்க முடியுமா?

எமது நிதிசார் மூலோபாயத்தில் பங்காளர் பங்கிலாப வீதம் முக்கியமான அங்கமாக அமைந்திருந்த போதிலும், எமது பிரதான வினைத்திறன் குறிகாட்டிகளில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த விடயத்தில் மாறுதலை விரும்பாத வழிமுறையை நாம் பின்பற்றி, உறுதியற்ற நிலைகளிலும், எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் ஆதரவளிப்பதற்கும் தக்க வைக்கப்பட்ட வருமான வீதம் பேணப்படுவதை உறுதி செய்கின்றோம். எமது பங்காளர்களுக்கு வெகுமதியளிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ள அதேவேளை, நிறுவனத்தின் நீண்ட கால நிதிசார் உறுதியான நிலை மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிப்பதிலும் கவனம் செலுத்துகின்றோம். அதன் பிரகாரம், எதிர்கால முதலீடுகள், திரள்வு நிலை் மற்றும் ஒட்டுமொத்த மூலோபாய இலக்குகள் ஆகியவற்றுக்கு எதிராக கவனம் செலுத்தப்பட்டு எமது பங்கிலாபம் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சமநிலையான வழிமுறையினூடாக, பங்குதாரர்களுக்கான எமது கடப்பாடுகள் நிறைவேற்றப்படுவது மட்டுமன்றி, எதிர்வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாட்டுக்கு நிலைபேறான நிலை தொடர்பிலும் கவனம் செலுத்த உதவுகின்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division