Home » நாளொன்றுக்கு 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

நாளொன்றுக்கு 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

by Damith Pushpika
April 21, 2024 6:40 am 0 comment

நாளொன்றுக்கு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7,000 ஐ தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி, அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வருடம் முதல் 03 மாதங்களில் மட்டும் 635,784 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்குள் 82,531 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அதன்படி இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 718,315 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 02 இலட்சத்துக்கும் அதிகமாகும். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் 208,253 சுற்றுலாப் பயணிகளும் கடந்த ஆண்டு 102, 545 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். மேலும் பெப்ரவரி மாதத்தில் 218,350 சுற்றுலாப் பயணிகளும் கடந்த ஆண்டு 107,639 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். மார்ச் மாதத்தில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 209,181 ஆகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதே எண்ணிக்கை 125,495 ஆகவும் காணப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 1,487,303 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அல்லது அதனைவிடக் கூடுதலாக இருக்கலாமென, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை தெரிவித்தது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division