Home » குரோதி வருடம் யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்?
தமிழ் புத்தாண்டு 2024 :

குரோதி வருடம் யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்?

by Damith Pushpika
April 7, 2024 6:10 am 0 comment

தமிழ் வருடங்கள் அறுபதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம் இந்த ஆண்டு பிறக்கிறது. இந்த வருடம் பிறக்கும் நேரத்தில் உள்ள கிரகநிலை அமைப்பு, மேஷத்தில் சூரியன், குரு, கன்னியில் கேது, கும்பத்தில் செவ்வாய், சனி, மீனத்தில் புதன், சுக்கிரன், ராகு எனக் காணப்படுகிறது. இந்த வருடம் எப்படி இருக்கும் எனப் பார்க்கலாம்.

இந்த அமைப்பின் காரணமாக இந்த ஆண்டு பொதுவாக உலக அளவில் இயற்கைச் சீற்றமும், எதிரிகளால் பயமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் இதைத் தவிர்க்கலாம். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் உடல்நலனிலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துவது முக்கியமாக இருக்கும். எரிமலைச் சீற்றம், கடற்கொந்தளிப்பு, மலைப்பிரதேசங்களில் சரிவு, நெருப்பினால் விபத்துகள், இரசாயனக் கழிவுகளால் விபத்துகள் எனப் பலவகையிலும் பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு. எனவே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். அதேசமயம் மக்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் ஏற்படும்.

இதன் தொடர்ச்சியாக 12 ராசிகளின் பலன்களை பார்க்கலாம்.

மேஷம்

உயர்வுகள் வரக்கூடிய உன்னதமான ஆண்டு. பணியிடத்தில் பதவி, இடமாற்றம், ஊதிய உயர்வுகள் கைகூடும். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்பட்டு தகுந்த பெருமைகள் தரப்படும். திடீர் பொறுப்பும், புகழும் திக்குமுக்காட வைக்கும். சமயத்தில் உடனிருப்போருடன் அனுசரித்துப் போகப் பழகினால், கிரகங்களின் அனுக்கிரகம் நிரந்தரமாக இருக்கும். குழப்பமும் கூச்சலுமாக இருந்த குடும்ப சூழல், இனி அமைதியும் ஆனந்தமுமாக மாறத்தொடங்கும். தம்பதியருக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை செய்துமுடிக்க சந்தர்ப்பம் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். வீடு, வாகனம், மனை, சொத்து சேரும். செய்யும் தொழில் பெரும் வளர்ச்சி பெறும். அயல்நாட்டு வர்த்தகங்கள் கைகூடும். புதிய முதலீடுகளை முறையாக யோசித்து செய்வது நல்லது. விவசாயத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

உங்களுக்கு நல்லவை அதிகரிக்கும் ஆண்டு. பணியிடத்தில் இருந்த பாதகமான சூழல் மறையும். திறமைகள் மதிக்கப்பட்டு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பொறுப்புகளில் அலட்சியமும் அவசரமும் கூடவே கூடாது. கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். முக்கியமான கோப்புகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு வாக்குவாதமும் கூடாது. ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து லாபம் தரும். வாரிசுகளால் பெருமை சேரும். பழைய கடன்களை வசூல் செய்ய சந்தர்ப்பம் அமையும். குடும்பப் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய மூன்றாம் நபரை அணுக வேண்டாம். எந்தத் தொழில் செய்தாலும் ஏற்றமும் வளர்ச்சியும் ஏற்படும்.

வெளிநாட்டு வர்த்தகத்தில் உரிய நடைமுறைகளை முழுமையாகக் கடைப் பிடியுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். எதிரி பலம் ஒடுங்கும். பொது இடங்களில் நாவடக்கம் அவசியம். மாணவர்கள் திறமைக்கு உரிய உயர்வுகளைப் பெறலாம். சோம்பலை விரட்டினால் சாதனைகள் படைக்கலாம். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை வீண் ஜம்பத்தால் விலக்கவேண்டாம். அவசியம் இல்லாத இரவுநேரப் பயணத்தைத் தவிருங்கள். விஷ ஜந்துகள், வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து விலகியே இருங்கள். நீரிழிவு, மூட்டுத் தேய்மானம், கொழுப்பு அதிகரிப்பு, காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகள் வரலாம்.

மிதுனம்

மாற்றங்கள் வரக்கூடிய வருடம். அலுவலகத்தில் உரிய உயர்வுகள் தேடிவரும். அவசரமும் அலட்சியமும் எந்தப் பணியிலும் வேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வெளிநாடு, வெளியூர் சென்று பணியாற்றும் வாய்ப்பு சிலருக்கு வரலாம். இடமாற்றத்தைத் தவிர்க்காமல் ஏற்பது எதிர்காலத்தை வளமாக்கும். குடும்பத்துல குதூகலம் நிறையத்தொடங்கும். உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியத் தடைகள் விலகும். வீடு, வாகனம் மாற்ற, புதுப்பிக்க நேரம் அமையும். குலதெய்வ வழிபாட்டிலும், வார்த்தைதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உணர்ந்து நடப்பது உத்தமம். செய்யும் தொழிலில் திடீர்வளர்ச்சி ஏற்படும். பங்குவர்த்தகத்தில் பெரும் முதலீடு வேண்டாம். அரசு, அரசியல் துறைசார்ந்தவர்கள் அடங்கியும் முடங்கியும் இருந்த சூழல் மறையும். புறம்பேசும் நபர்களை உடனே புறம்தள்ளுங்கள். உடனிருக்கும் யாரிடமும் வீண் கடுமை வேண்டாம்.

மாணவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

கடகம்

பொறுப்புடன் செயல்படவேண்டிய ஆண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும் தாமதமானாலும் பதவி, பொறுப்பு, இடமாற்றம் உங்கள் மனம்போல கைகூடும். பொறுப்புகளை திட்டமிட்டு செய்தால், உங்கள் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். வேலை தேடுவோர்க்கு மனம்போல வேலை அமையும். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை உருவாகும். சுபகாரியத் தடைகள் நீங்க பெற்றோர் பெரியோர் வழிகாட்டலைக் கேளுங்கள். நட்புகள் விஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.

செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம். செய்யும் தொழிலில் லாபத்தின் அளவுகோல் அதிகரிக்கும் கூட்டமைப்பில் சேர்ந்து செயல்படும் அமைப்பு உருவாகும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தடைகள் நீங்கும். கடன் தருவது, பெறுவதில் நிதானம் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு அனுகூலமான காலகட்டம். மேலிடத்தின் ஆதரவு அதிகரிக்கும். உடனிருந்தே உபத்திரவம் செய்பவர்களை உடனடியாக ஒதுக்குவது முக்கியம்.

சிம்மம்

அமைதியாகச் செயல்படவேண்டிய ஆண்டு. அலுவலகத்தில் ஒருபோதும் அவசரம் அலட்சியம் கூடாது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம். தவிர்க்காமல் ஏற்பது நல்லது. மேலதிகாரியிடம் பேசும்போது வீண் கர்வம் தவிருங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேட்டால், நல்லவை நிச்சயம் நடக்கும். குடும்பத்தில் விடியல் வெளிச்சம் வரும். அதைத் தக்கவைக்க விட்டுக்கொடுத்தல் முக்கியம். யாருடைய தலையீட்டையும் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். அசையும், அசையா பொருட்சேர்க்கை ஏற்படும். மாணவர்கள் மனம் போல் மதிப்பு உயரும்.

கன்னி

ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய ஆண்டு. பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். புதிய மாற்றங்களால் நீங்கள் எதிர்பார்த்த ஏற்றங்கள் வரும். பதவி, ஊதியம் உயரும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். அயல்நாட்டு பயணவாய்ப்பு சிலருக்கு தேடி வரும். புதிய பணி மாறும் முன் யோசித்து செய்வது நல்லது., குடும்பத்தில் நல்லவைகள் நடக்க தொடங்கும். வாழ்க்கை துணையால் அனுகூலங்கள் ஏற்படும். வாரிசுகளை கண்டிப்பதில் நிதானம் முக்கியம். அசையும், அசையா பொருட்சேர்க்கை ஏற்படும். பிற மொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. வயதில் முதியவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். பல கால கனவுகள் ஈடேறத்தொடங்கும். சிலருக்கு தொழில் மாற்றமும் அதனால் லாபமும் உண்டு. அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை ஆதாயத்தை அதிகரிக்கும். அரசு, அரசியல் துறைகளில் உள்ளோருக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். சிலருக்கு புதிய பதவி பொறுப்பு வாய்ப்புகள் கைக்கூடும்.

துலாம்

வார்த்தைகளில் நிதானம் இருந்தால், வாழ்க்கையில் வளம் வரும் ஆண்டு. சிலருக்கு பணி சார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பும் உண்டு. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். தம்பதியரிடையே இருந்த சச்சரவுகள் மறையும். குடும்பத்துப் பெரியவர்கள் ஆலோசனை கேட்டால் சுபகாரியங்கள் கைகூடும். வாரிசுகள் உடல்நலம் சீராகும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். கொடுக்கல் வாங்கலை நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. செய்யும் தொழில் எதுவானாலும் உழைப்புக்கு உரிய உயர்வுகள் வரும். அயல்நாட்டு வர்த்தகம் தடைநீங்கிக் கைகூடும்.

பூமி சார்ந்த வர்த்தகங்களில் நிதானம் தேவை. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு படிப்படியாக உயர்வுகள் வந்து சேரும். மேலிடத்திடம் பேசும்போது பணிவே நல்லது. யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். புதிய வாய்ப்புகளில் வீணாக பேதம் பார்க்க வேண்டாம். மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவது முக்கியம்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு. பணியிடத்தில் உங்கள் பதவி, பொறுப்பு, ஊதியம் உயரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு கிடைக்கும். மேலிடத்தால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் அவை ஆதாயமே தரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும் விலகி இருந்த உறவுகள் தேடிவந்து அன்புகாட்டும். சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். ஆடை, ஆபரணம், பொருட்சேர்க்கை ஏற்படும். புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பூர்வீக சொத்து சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்கும். அயல்நாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கனரக தொழிலில் இருப்போர்க்கு கவனச் சிதறல் கூடாது.

அரசியல், அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். சிலருக்கு திடீர் பதவி, பொறுப்பு வந்து சேரும்.

தனுசு

கவனமாகச் செயற்பட்டால் கணிசமான நன்மைகள் கிட்டும் ஆண்டு. அலுவலகத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். எந்த சமயத்திலும் அலட்சியமும் அவசரமும் கூடாது. மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் ரோஷம் வேண்டாம். இப்போதைய பொறுமையே எதிர்கால ஏற்றம். இல்லத்தில் நல்லவைக்குக் குறைவிருக்காது. அவை நிலைக்க நாவடக்கம் முக்கியம். தம்பதியர் பிரச்சினையில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். சு

பகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை பத்திரமாக வையுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் வர்த்தகம் வாணிபத்தில் முறையான உழைப்பு இருந்தால் நிலையான முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாகச் செயல்படுவது நல்லது. பொது இடத்தில் வாக்குறுதிகள் தரும் முன் யோசியுங்கள்.

மகரம்

எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். ஏற்றமும் மாற்றமும் எண்ணப்படியே வந்து சேரும். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம். தவிர்க்க வேண்டாம். பொறுப்பு உயர்வை பொறுப்புடன் ஏற்றிடுங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். விசேஷங்கள் தொடர்ச்சியாக வரும்.

உறவுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை சேரும். ஆன்மிகப் பயணங்கள் செல்லும் சந்தர்ப்பம் அமையும். வீடு, வாகனம், ஆபரணம் சேரும். தம்பதியரிடையே அந்நியோன்யம் உருவாகும். வர்த்தகம், வாணிபம் எதுவானாலும் அதில் லாபம் வளர்ச்சியாகும். புதிய முதலீடுகளை தெரிந்த தொழிலில் மட்டும் செய்வது நல்லது. வர்த்தக நிபந்தனைகளை யாருக்காகவும் மீறவேண்டாம்.

கும்பம்

அடக்கமாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மை கிட்டும் ஆண்டு. பணியிடத்தில் துணிவை விடப் பணிவே நல்லது. உங்கள் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும்.

அதற்குப் பொறுமையே முக்கியம். வீட்டில் நிம்மதி நிலவும். அது நிலைக்க விட்டுக்கொடுத்தல் முக்கியம். உறவுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். மூன்றாம் நபரை மத்தியஸ்தம் செய்ய அழைக்க வேண்டாம். அன்பும் அமைதியுமே அனைத்திலும் நன்மை செய்யும். வர்த்தகத்தில் திடீர் வளர்ச்சி ஏற்படும். இந்த சமயத்தில் உழைப்பை உறுதியாக்குவது அவசியம்.

மீனம்

தலைக்கனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் ஆண்டு. அலுவலகத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள். எல்லாம் தெரியும் நினைவும் ஏனோ தானோ செயலும் கூடாது. இடமாற்றம் தாமதமானாலும் கைகூடும். பதவி, ஊதிய உயர்வு வேண்டுவோர் வீண் புலம்பல் தவிர்ப்பது முக்கியம். சிலருக்குப் புதிய பணிவாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். சுபகாரியங்களும் உறவுகள் வருகையும் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவை அறவே தவிருங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் கிட்டும். வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். அது தொடர, தளர்ச்சி இல்லா உழைப்பு முக்கியம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். புதிய முதலீடுகளை நிதானித்துச் செய்யுங்கள்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division