லிற்றோ Gas விலையில் திங்கள் முதல் மாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

லிற்றோ Gas விலையில் திங்கள் முதல் மாற்றம்

லிற்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ நிறுவனம் மாற்றியமைக்கவுள்ளது.

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் மாதாந்த விலையையே இவ்வாறு மாற்றியமைக்கவுள்ளதாக, லிற்றோ நிறுவனம் தெரிவித்தது. எரிவாயு சிலிண்டர்களின் விலையானது, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதியன்று மாற்றியமைக்கப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், லிற்றோ நிறுவனம் கடந்த மாதம் விலையை மாற்றியமைக்கவில்லை. அண்மைய திருத்தத்தில் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Comments