இன்று வெளியாகிறது ஜெயிலர் திரைப்பட ட்ரெய்லர் | தினகரன் வாரமஞ்சரி

இன்று வெளியாகிறது ஜெயிலர் திரைப்பட ட்ரெய்லர்

ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அதனை தொடர்ந்து தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளியான காவாலயா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல், ‘ஹூக்கும்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ஹிட்டானது. மூன்றாவது பாடலான ஜூஜூபி மேட்டர் பாடலும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஜெயிலர் படம் வெளியாக இன்னும் 8 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகமால் இருந்தது. அந்தவகையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Comments