வித்யோதய இலக்கிய விருது விழா | தினகரன் வாரமஞ்சரி

வித்யோதய இலக்கிய விருது விழா

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தினால் 14வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட வித்யோதய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு செப்டம்பர் 1ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் பல்கலைக்கழக சுமங்களா மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் அச்சு ஊடக அனுசரணையினை அசோசியேட்டட் நியூஸ்பேப்பர் ஒப் சிலோன் லிமிடெட் நிறுவனம் (லேக்ஹவுஸ்) வழங்கியிருந்தது. பல்கலைக்கழகம் ஒன்றினால் நடத்தப்படும் ஒரே இலக்கிய விருது விழா இதுவாகும்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகேயின் தலைமையில், மனித நேய மற்றும் சமூகவியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஷிரந்த ஹீங்கெந்த மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் உள்ளிட்ட பல பிரமுகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த வித்யோதய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் ஐந்து போட்டி நிகழ்வுகளில் படைப்புக்களைச் சமர்ப்பித்த போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் கடந்த வருடத்தில் பிரசுரமான சிறந்த பத்திகளின் தொகுப்பு, சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த நாவல் மற்றும் மனித நேய, சமூகவியல் ஆகிய துறைகளில் வெளியான சிறந்த கல்விப் படைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் இறுதிச் சுற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் படைப்புகள் கௌரவிக்கப்பட்டன.

வித்யோதய பல்கலைக்கழகமும் லேக்ஹவுஸ் நிறுவனமும் இலக்கியத்திற்காக பெரும் பணியை ஆற்றியுள்ளன என்றும், இந்த நிலையில் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது பெருமைக்குரியது என்றும் வித்யோதய 2023 இலக்கிய விருது வழங்கும் நிகழ்வின் உத்தியோகபூர்வ அச்சு ஊடக அனுசரணையினை வழங்கிய அசோசியேட்டட் நியூஸ் பேப்பர் ஒப் சிலோன் லிமிடெட் நிறுவனத்தின் (லேக்ஹவுஸ்) தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் போது கூறினார்.

இந்நிகழ்வில் வித்யோதய இலக்கிய விருது வழங்கும் விழாவின் ஸ்தாபகர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

Comments