உலகின் உயரமான ரயில்வே பாலம்! | தினகரன் வாரமஞ்சரி

உலகின் உயரமான ரயில்வே பாலம்!

உலக அதிசயமான ஈபிள் டவரை விட அதிக உயரம் கொண்ட ரயில்வே பாலம் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் அமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையான ரயில் பாதைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் 2004ஆண்டில் இந்திய இமயச் சரிவில், செனாப் ஆற்றைக் கடக்க மாபெரும் இரும்பு வளைவு ரயில் பாலம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா அரசு திட்டமிட்டது. காஷ்மீரை, நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், செனாப் நதியின் குறுக்கே, 1,562அடி நீள வளைவு இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. 2017நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலம், 1,250கோடி ரூபாய் செலவில், 1172அடி (359மீட்டர்) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இது ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயமான ஈபிள் டவரைவிட உயரமானது. ஈபிள் டவரின் உயரம் 324மீட்டர். அதை விட 35மீட்டர் அதிக உயரம் கொண்டிருக்கிறது இந்த பாலம். பாலத்தின் நீளம் 17இடைவெளிகளுடன், 1,315மீட்டர் இருக்கும்படியும், அதில் செனாப் ஆற்றின் குறுக்கே, பிரதான வளைவின் பரப்பளவு மட்டும் 467மீட்டர் இருக்கும்படியும் பாலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலம் பயங்கர குண்டுவெடிப்பையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.

சுஜானி திருஆலன்,
நெடுங்குளம்,
வவுனியா.

Comments