துப்பறிய நாய்களைப் பயன்படுத்துவது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

துப்பறிய நாய்களைப் பயன்படுத்துவது ஏன்?

மோப்ப உணர்வு அதிகமாகவுள்ள விலங்குகளில் நாயும் ஒன்றாகும். நாய்களை வேலை செய்யப் பழக்குவதுபோல வேறு விலங்குகளுக்கு இவ்வாறு பயிற்றுவிக்க முடியாது. நம்மோடு வாழக் கற்றுக்கொண்ட அது நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு செய்யமுடிகிறது. ஆதிகால மனிதன் வேட்டையாடி வாழ்ந்து வந்த காலத்திலேயே நாய்களைத் தனக்கு உதவியாக வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டான். நாகரிகமடைந்து குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த காலத்தில் நாயும் மனிதர்களுடனேயே தங்கிவிட்டது. இப்போது காடுகளில் நாய்களைக் காணமுடிவதில்லை.

மனிதருக்கும் மோப்ப உணர்வு ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். அது காலப்போக்கில் மங்கி விட்டது. நாய்களிடம் அது நிலைத்துவிட்டது. தன் உணவு, இணை, குட்டி, எதிரி போன்ற எல்லாவற்றையும் நாய் மோப்பத்தினாலேயே உணர்கிறது.

முகர்வது என்பது ஒரு ரசாயனச் செயல்பாடாகும். இதற்கான உறுப்புக்கள் கெமோரிஸப்டர்கள் எனப்படுகின்றன. இவை மூக்கில்தான் அமைந்துள்ளன என்றபோதிலும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. இவையும் இவைகளிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு நார்களும் மிகவும் நுட்பமானவை. ஒவ்வொரு மூக்குத் துவாரத்திலும் உள்ள ஒரு பள்ளத்தில் இவை அமைந்துள்ளன.

இந்தக் குமிழ் மனிதர்களிடம் காணப்படுவதைவிட ஆனால் ஆழ்ந்து முகரும்போது கெமோரிசப்டர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து செல்லும் நுண்ணிய நரம்புகள் மூளையிலுள்ள வாசனையை உணரும் மையத்துடன் இணைந்துள்ளன.

இந்தக் குமிழ் மனிதர்களிடம் காணப்படுவதைவிட பெரியதாக நாய்களிடம் உள்ளது. அதனாலேயே அதிகளவில் மோப்ப உணர்வைக் கொண்டுள்ளன. நம்மால் உணரமுடியாத நட்பமான, வாசனைகளையும் அதனால் உணரமுடியும். அதனால்தான் துப்புதுலக்க நாள்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மணத்தை முகர்ந்த அது அந்த மணத்தை செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து அறியும்.

எதிர்ப்படும் எல்லாவற்றையும் முகர்ந்து பார்த்து அது என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நாய் இருக்காது. நாயை வீதிகளில் நடத்திச் செல்லும்போது எவரும் இதைக் கவனித்திருக்கலாம். வீட்டுக்கு புதிதாக யார் வந்தாலும் அவர்களை முகர்ந்து பார்ப்பதும் இதனால்தான். காற்று வீசும் திசையை நோக்கியே நாய் எப்போதும் படுக்கும். மூக்கில்படும் மணத்தை நுகர்ந்து எதிரி யாரேனும் வந்தால் தெரிந்து கொள்ள முடியுமல்லவா? அதற்காகத்தான் இவ்வாறு செய்கிறது.

நாய்க்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது. அதனாலேயே உடல் வெப்பம் வெளியேறுவதற்காக எப்போதும் நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர். ராஹினி,  
வெளிமடை

Comments