தவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

தவிப்பு

மானிட உணர்வுகளை  
முகத்துள் புதைத்து  
அதிகாலையில் மலர்ந்த  
புதிய பூக்களாய்  
செயற்கையான மலர்ச்சியை  
புறத்தில் காட்டும்  
யதார்த்தம் ஆகிப் போன இருப்பு  
எல்லாமே முரண்பாடாக  
உள் இருக்கும் தவிப்பை  
தவிர்க்கும் முயற்சியில்  
அப்பப்போ  
முள்ளில் பட்ட பாதங்களாய்  
நோ பட்டுக் கொள்ளும் மனது  
இலைகள் உதிர்ந்த  
மரத்தின் கீழ்  
நிழல் தேடி ஒதுங்கும்  
தவிப்பின் கணங்கள்  
ஆகாயத்தின் வாசல்  
திறந்து இருந்தாலும்  
மழை கால இருளாக  
மேகக் கூட்டத்தின்  
கதவுகள் மூடப்பட்டதான  
எண்ணங்கள்  
புதைக்கப் பட்டு  
இருக்கும் உணர்வுகள்  
அமைதி தேடி தவிக்கும்

ஜெகன்

Comments