மட்டக்களப்பில் உணவு களஞ்சியசாலை திறப்பு | தினகரன் வாரமஞ்சரி

மட்டக்களப்பில் உணவு களஞ்சியசாலை திறப்பு

மட்டக்ளப்பு, கள்ளியன்காடில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால்  நேற்று திறந்து வைக்கப்பட்டது.  

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சத்தின் தொலை நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் வர்த்தக அமைச்சர் பந்துள்ள குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு களஞ்சியசாலையை திறந்து வைத்தார். இதன்போது பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு அபிவிருத்திக் முழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Comments