பாசத்தோடு வாழ்ந்திடு | தினகரன் வாரமஞ்சரி

பாசத்தோடு வாழ்ந்திடு

சின்னச்சின்ன பூவைப்போலே  
தலையசைக்கும் தங்கையே  
வண்ண வண்ணக் கோலம் போட்ட  
சட்டை அழகைக் கூட்டுதே!  
துள்ளித்துள்ளித் திரியும் நீ  
துடிப்பாய் என்றும் வாழ்ந்திடு  
பள்ளிப் படிப்பால் உயர்ந்திடு  
பாசத்தோடு வாழ்ந்திடு  
ஒற்றுமையைக் காத்திடு  
உண்மை தன்னை பகிர்ந்திடு  
பற்று நாட்டில் கொண்டிடு  
பாவம் தன்னை வெறுத்திடு  
வல்ல வல்ல செயல்களாய்  
வாழ்வு தன்னை அணைத்திடு  
பொல்லா நெஞ்சு கொண்டோரின்  
உறவைக் கிள்ளி எறிந்திடு!

பசறையூர் மல்லிகா பத்மநாதன்

Comments