உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று | தினகரன் வாரமஞ்சரி

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 

2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய நியூசிலாந்து அணி இம்முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

ஆனால், 1992 ஆம் ஆண்டு Graham Gooch தலைமையில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளின் பின்னர் தனது சொந்த மண்ணில் மீண்டும் Eoin Morgan தலைமையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

பிரிட்டன் நேரப்படி இன்று காலை 10.30இற்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இலங்கை நேரப்படி மாலை 3.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது. இங்கிலாந்தின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுடன் மோதி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.  

இதனையடுத்து இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன. லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 

உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதாலும் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி விளையாட உள்ளதாலும் லண்டன் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.  

இறுதிப் போட்டியில் இலங்கை, ஆஸி.நடுவர்கள்

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுகிடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டிக்கு நடுவர்களாக இலங்கையின் குமார் தர்மசேன, தென்னாப்பிரிக்காவின் மரியாஸ் எரஸ்மஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.சீ.சீ. நேற்று இதனை அறிவித்துள்ளது.  

அவுஸ்திரேலியா-, இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத்தின்போது நடுவர்களாக செயல்பட்ட இலங்கையின் குமார் தர்மசேனா, தென்னாப்பிரிக்காவின் மரியாஸ் எரஸ்மஸ் ஆகியோரே இறுதிப் போட்டியின் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.    அவுஸ்திரேலியாவின் ராட் டக்கர் மூன்றாவது நடுவராகவும், பாகிஸ்தானின் ஆலிம் தர் நான்காவது நடுவராகவும் செயல்படுவர்.  

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராக செயல்படுவார். 

அபாரமான தொடக்க வீரர்கள், அட்டகாசமான மிடில் ஆர்டர், அசர வைக்கும் ஆல்ரவுண்டர்கள், நேர்த்தியாக பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் - புத்திசாலித்தனமான தலைமை என இதுவரை இல்லாத வகையில் மோர்கன் அணி அசாத்திய வலிமையோடு விளங்குகிறது என இங்கிலாந்து ரசிகர்க்ள தெரிவிக்கின்றனர். 

இந்தியாவிடம் முதலிடத்தை இழந்தாலும் இங்கிலாந்து அணி போராடி தற்போதைய சூழலில் சிறப்பான அணியாக வலம் வருகிறது.  2019 உலகக் கிண்ணம் தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி கிண்ணத்தை வெல்ல வாய்ப்பிருக்கும் அணிகளில் மிக முக்கியமான அணியாக கருதப்பட்டது. 

ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு ஆசிய அணிகளிடம் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் தோல்வியடைந்தது. இதனால், அரை இறுதிக்கே தகுதி பெறாமல் தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறுமோ என்ற பதற்றம் ஏற்பட்டது. 

இலங்கை அணியுடனான தோல்வி இங்கிலாந்து அணியைக் கடும் சிக்கலில் தள்ளியது. தனது கடைசி மூன்று போட்டிகளில் இரண்டை வெல்ல வேண்டிய சூழல். அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து என மூன்று அணிகளுமே நல்ல முன்னேற்றத்தில் இருந்தன. தவிர, இந்த மூன்று அணிகளில் ஓர் அணியைக் கூட கடந்த 27 ஆண்டுகளாக உலகக் கோப்பையில் இங்கிலாந்து வென்றதில்லை என்ற வரலாற்றுப் புள்ளிவிவரமும் இங்கிலாந்து ரசிகர்களை அச்சப்படுத்தியது.அந்த அச்சத்தை மேலும் கூட்டியது இங்கிலாந்து – அஸ்திரேலியா போட்டி. 

கடும் நெருக்கடியில் இந்தியாவை எதிர்கொண்டது இங்கிலாந்து. இப்போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு முன்னதாக பேர்ஸ்டோ மீது கடுமையாக விமர்சனங்கள் இருந்தன. 

27 ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்குள் நுழையவில்லை என்பதால் கவனமாக இங்கிலாந்து விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவுஸ்திரேலியாவிடம் சேசிங் அவ்வளவு எளிதாக நடந்து விடாது என ரசிகர்கள் நம்பினர்.  ஆனால் அத்தனையையும் பொய்யாக்கியது இங்கிலாந்து. 

பெர்மிங்காமின் ஒவ்வொரு அங்குலத்தையும் தெரிந்து வைத்திருந்த ராய் மற்றும் பேர்ஸ்டோ இணை அதிரடி பாணியை கையிலெடுத்தது.

இவ்விருவரும் அவுட் ஆனதும் அனுபவமிக்க ரூட் மற்றும் கேப்டன் இயான் மோர்கன் கொஞ்சம் கூட ரன்ரேட்டை குறைக்கும் விதமாக விளையாடாமல் நேர்த்தியாக ஆடி வென்றனர்.

Comments