இலவச பால் விநியோகம் நாளை முதல் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இலவச பால் விநியோகம் நாளை முதல் ஆரம்பம்

கனிஷ்ட வகுப்புகளின் கல்வி பயிலும் 10இலட்சத்து 30ஆயிரம் மாணவர்களுக்குக் காலையில் இலவசமாகப் பால் பக்கற்றுக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன் பிரகாரம் நாளை (22) இதற்கான தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கலவானை கஜுகஸ்வத்த மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 

இலவச உணவுத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத பாடசாலைகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. முக்கியமாக தோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு முதற் கட்டமாக இந்த இலவச பால் பெற்றுக் கொடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்காக 2019ஆம் வருடத்துக்காக 3976.55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Comments