எரிபொருள் விலையேற்றம்; மானியம் வழங்க நடவடிக்ைக | தினகரன் வாரமஞ்சரி

எரிபொருள் விலையேற்றம்; மானியம் வழங்க நடவடிக்ைக

எரிபொருள் விலையேற்றத்தால் அதிகரித்துள்ள அசெளகரியங்களை தடுத்து மானியம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (15) விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இக்கூட்டத்தின்போது எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார். இக்கூட்டத்துக்கு நிதி, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட பொருளியல் நிபுணர்களைக் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்துடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்திருப்பதனால் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அசெளகரியங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

டொலர் விலையேற்றத்துடன் சிங்கப்பூரில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்ததாலேயே இந்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

 

Comments