ஹற்றன்- - கொழும்பு வீதியில் தொடர்ந்தும் மண்சரிவு | தினகரன் வாரமஞ்சரி

ஹற்றன்- - கொழும்பு வீதியில் தொடர்ந்தும் மண்சரிவு

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயநிலை காரணமாக அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, மண்சரிவு அகற்றப்பட்ட பின் வழமைக்கு திரும்பின. தொடர்ந்தும் அவ்வீதியில் ஏற்பட்ட மண்சரிவுடன் வீதி முற்றாக மூடப்பட்டது இதனால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

அதனை தொடர்ந்து வீதி அதிகார சபையினரும், ஹற்றன் பொலிஸாரும் இணைந்து அவ்வீதிக்கு அருகில் புதிய மாற்று வீதியை அமைத்து (17)இரவு 10 மணி முதல் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர். அதன் பின் அவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது. எனினும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

Comments