தொடர்பு துண்டிக்கப்பட்டு
தொலைந்து போன
செய்மதி போல்
நம் இருவரின் உறவும்
துண்டிக்கப்பட்டு போனது
இருந்தும் நம் இருவரின் அன்பு
காதல் தேசத்தில்
அங்கீகரிக்கப்பட்டதால்
மீண்டும் நாம் இருவரும்
சந்திக்க சந்தர்ப்பம்
கிடைத்த வேளையில்
நீ எனைப் பார்த்து
புன்னகைத்த புன்சிரிப்பு
என்னை சொர்க்கத்திற்கே
கொண்டு
போய்ச் சேர்த்து விட்டது
அன்பே இது போதும்
நூறு ஆண்டுகள் – நான்
உன்னோடு வாழ்ந்தது போல்
இருந்தது அந்த ஒரு
நொடிப் பொழுது!