பதவி விலகுவாரா? விலக்கப்படுவாரா? | தினகரன் வாரமஞ்சரி

பதவி விலகுவாரா? விலக்கப்படுவாரா?

நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் ஐ.தே.க பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கெதிரான பிரேரணை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் நாளை பிரதமரிடம் கையளிக்கப்பட இருக்கிறது.

இதனையும் கருத்திற்கொண்டு அவர் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்பட இருப்பதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர ஐ.தே.க பின்வரிசை எம்.பிகள் முனைந்திருந்த நிலையில் இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த கட்சி செயற்குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது.

அவருக்கு எதிரான பிரேரணைக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இது பற்றி மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இந்த நிலையிலே ஐ.தே.க பாராளுமன்ற குழு நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூடுகிறது. அவரை பதவி விலகு மாறு கோரவோ அல்லது பதவி நீக்கம் செய்யவோ வேண்டும் என அநேக ஐ.தே.க எம்.பிகள் கருதுவதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அவரிடம் இருந்து நீதி அமைச்சை நீக்கி ​ெபளத்த விவகாரத்தை மாத்திரம் வழங்க வேண்டும் எனவும் சில தரப்பினர் அபிப்பிராயம் முன்வைத்துள்ளதாகவும் அவர்த குறிப்பிட்டார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மகா சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதனையும் சமாளிக்கும் வகையில் இவ்வாறான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. நாளைய கூட்டத்தில் அமைச்சர் விஜேதாஸவுக்கு எதிராக பின்வரிசை எம்பிகள் பலரும் கருத்து முன்வைக்க இருப்பதாகவும் கடந்த இரு வருடங்கள் கடந்தும் கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான மேசடிகள் தாமதமாக அமைச்சர் விஜேதாஸ தான் காரணம் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது தெரிந்ததே. 

Comments