சிந்திக்கச் சில | தினகரன் வாரமஞ்சரி

சிந்திக்கச் சில

முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. மரம் நடவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், தயவு செய்து மரத்தை வெட்டாதீர்கள். திறமை உங்களை துவங்க வைக்கலாம். விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும்தான் உங்கள் வாழ்க்கையை இறுதி வெற்றி வரைக்கும் அழைத்துச் செல்லும்.

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள். உங்கள் கண்ணீர் உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும். அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமானால் உன்னை நேசி, சந்தோஷம் வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி.

 

சோ. வினோஜ்குமார்,

கமு/கது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், சம்மாந்துறை. 

 

Comments