Home » ஹீலியம்

ஹீலியம்

by Damith Pushpika
February 18, 2024 6:00 am 0 comment

ஹீலியம் 1868ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகும். குழந்தைகளை சந்தோசப்படுத்த எப்போதும் மேலேயே பறந்துகொண்டிருக்கும் பலூன்களில் நிரப்பப்படுவது ஹீலியமாகும். இது பூமியிலிருப்பதாக கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே, சூரிய ஒளிக்கதிர்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த Pierre Janssen and Norman Lockyer என்ற இரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரியனுக்கருகில் ஹீலியம் நிறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். சூரியனைக்குறிக்கும் Helios என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததே ஹீலியம்.

ஹீலியம் வாயு தான் ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியான இலேசான வாயு. காற்றிலுள்ள வாயுக்களில் பெரும்பகுதியான நைட்ரஜன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஹீலியம் மிகவும் இலேசானதாக இருப்பதால் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் மேலெழுகின்றன.

ஒரு கிராம் எடையுள்ள பொருளை மேலே தூக்கிச்செல்ல ஒரு லீற்றர் ஹீலியம் தேவைப்படும். நீங்கள் 50 கிலோவாக இருந்தால், உங்களை மேலே தூக்கிச் செல்ல எத்தனை லீற்றர் ஹீலியம் வாயு தேவைப்படும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். நிறம், மணம் இல்லாத இந்த வாயுவை திடமாகவோ, திரவமாகவோ பூஜ்ய டிகிரி வெப்பநிலையில் மாற்ற முடியும்.

விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹீலியம், முதன் முதலில் விற்பனைக்கு 1928ஆம் ஆண்டு வந்திருக்கிறது. ஹீலியம் நிறப்பப்பட்ட பலூன்களை வீட்டில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்திருந்தால், அவற்றிலிருக்கும் ஹீலியம் மெதுவாக வெளியேறி பலூன் தானாக தரைக்கு வந்துவிடும். ஹீலியத்தின் எடை மிகக்குறைவு. அதனால்தான் எந்த புவியீர்ப்பு சக்தியாலும் ஹீலியம் பலூன்களை கீழே வைத்திருக்க முடிவதில்லை.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division