AIOT தயாரிப்புகளுடன் மிக ஸ்டைலான realme 8 இலங்கையில் அறிமுகமானது | தினகரன் வாரமஞ்சரி

AIOT தயாரிப்புகளுடன் மிக ஸ்டைலான realme 8 இலங்கையில் அறிமுகமானது

உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, அதன் புத்தம்புதிய பதிப்பான realme 8 உடன் realme Buds Q2, realme Wireless 2 Neo, realme Watch 2 ஆகிய AIOT சாதனங்களை 2021 மே 17ஆம்திகதி இலங்கையில்அறிமுகப்படுத்தியது.  

realme இனது இலக்கத்தொடர் (Number Series) என்பதுநடுத்தர வகை சந்தையில் மிகவும் வெற்றிகரமான realme சாதனமாகும்.
இதுஏற்கனவேமூன்றுஆண்டுகளில் 33 மில்லியன் சாதனங்களின உலகளாவியவிற்பனையையும் 6 தலைமுறை மேம்படுத்தல்களையும் (6 generation upgrades) கொண்டுள்ளது. realme 8 மற்றும் AIOT தயாரிப்புகள்அபான்ஸ், சிங்ககிரி, டயலொக்மற்றும் Daraz realme முன்னுரிமை விற்பனைக்கூடம் ஆகியவற்றில் 2021 மே 20 முதல்நாடு முழுவதிலு முள்ள அங்கீகரிக்கப்பட்டrealme விற்பனையாளர்களிடமும்கிடைக்குமெனrealme ஸ்ரீலங்காஅறிவித்துள்ளது.  

இலங்கைக்கான தரக்குறியீட்டு முகாமையாளர், ரணுரகடுவெல இதுதொடர்பில் தெரிவிக்கையில்“realme ஆனது புத்தம் புதியதும், இளைஞர்களை மையமாகக் கொண்டதுமான ஸ்மார்ட்போன் தரக்குறியீடாகும். எமது சமீபத்திய நடுத்தர வகை ஸ்மார்ட் போனான realme 8 இனை அறிமுகப்படுத்துவதன் மூலம், இளவயது பயனர்களுக்கு உயர்ந்த அம்சங்களை மலிவானவிலையில் அனுபவிப்பதனை உறுதிசெய்ய விரும்புகிறோம். இதுவிலையில் மிகவும் மலிவான பதிப்பாக இருந்தபோதிலும், அதிலுள்ள அம்சங்கள் உயர் ரகபயனர் அனுபவத்தை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. Realme 8 ஆனது, இலங்கை இளைஞர்கள் எப்போதும் அடையவிரும்பும் அவர்களது உயிர்நாடியான ஸ்மார்ட்போன் சாகசங்களால் நிறைந்துள்ளது.” என்றார்.  

realme 8 ஆனது realme UI 2.0 அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சிறந் ஓடியோ வீடியோ அனுபவத்தினை வழங்கும் வகையிலான, உயர்தரத்திலான (Hi-Res) ஓடியோ சான்றிதழையும் அதுகொண்டுள்ளது.   

Comments