தொற்றா நோய் தடுப்புக்கென புதிய நல்வாழ்வு மையம் | தினகரன் வாரமஞ்சரி

தொற்றா நோய் தடுப்புக்கென புதிய நல்வாழ்வு மையம்

ஹேமாஸ் வைத்தியசாலை குழுமத்தின் தலவத்துகொடை வைத்தியசாலை தொற்றாநோய்களை அறிதல் மற்றும் சிகிச்சை வழங்குவதற்காக புதிய நல்வாழ்வுமையத்தை ஆரம்பித்துள்ளது. இந்த ஆரோக்கிய மையத்தினூடாக ஆண்களுக்கான ஆரோக்கியம், பெண்களுக்கான ஆரோக்கியம், சுகாதார கல்வி மற்றும் தொற்றாநோய்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதுடன் நோய்களுக்கான பரிசோதனைகள், ஆலோசனைகள், தொற்றாநோய்க்கான சிகிச்சைகள், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை நிறுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

பல்வேறு சுகாதார சேவைகள் தொடர்பான சிறந்த சேவைகளை வழங்கும் தலவத்துகொடை ஹேமாஸ் வைத்தியசாலையின் நல்வாழ்வுமையம் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாநோய்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்திவருகிறது.  

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்தியசாலையின் நல்வாழ்வு மையத்தின் பிரதானி டொக்டர் கெளசல்யாபெரேரா, தொற்றா நோய்கள் உலகில் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக தொற்றாநோயான நீரிழிவை நோக்கும்போது உலக சனத்தொகையில் 425மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 75வீதமானவைக்கு காரணம் நீரிழிவாகும். அதிலிருந்து விடுபட ஒரே வழி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதேயாகும். இருப்பினும் துரதிஷ்டமாக பலருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை தொடர்பான தெளிவில்லை. அதுதவிர அது தொடர்பாக இலக்கும் இல்லைஎன்றார். 

நீரிழிவு இலங்கையில் அதிகம் காணப்படுகின்ற தொற்றாநோயாகும். வயதுவந்த 12பேரில் ஒருவர் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைமை இந்த நோய்க்கான பிரதான காரணியாகும். உரிய சாப்பாடு முறைமை, பார கட்டுப்பாடு மற்றும் நாளாந்த உடற்பயிற்சி ஊடாக இதனை தடுக்க அல்லது கட்டுப்படுத்த முடியும். அத்துடன் அதனை முற்கூட்டியே அறிந்தால் அதுவராமல் தடுக்கமுடியும்.  ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் அடிக்கடி பரிசோதனைகள் ஆகியன ஹேமாஸ் நல்வாழ்வு மையம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் எமது நோயாளர்களடன் எமக்கு நெருங்கிய தொடர்பை பேணமுடியும். அத்துடன் அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசேட மருத்துவர்கள் கலந்துகொள்ளும் செயற்திட்டம் ஊடாக நோயாளர்களுக்கு புதிய சிகிச்சைமுறை தொடர்பாக அறிவுறுத்தப்படுவார்கள். இதன்மூலம் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ வழி ஏற்படுகின்றது என டொக்டர் கெளசல்யா பெரேரா தெரிவித்தார்.  

ஹேமாஸ் வைத்தியசாலை வலையமைப்பின் புதிய நல்வாழ்வு மையத்தின் முக்கியநோக்கம் நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் நோய் நிலைமை தொடர்பாக ஒன்றிணைந்த முகாமைத்துவம் தொடர்பாகவே அமைந்துள்ளது.

Comments