வில்லியம் அங்க்லீஸ் பட்டமளிப்பு விழா 2018 | தினகரன் வாரமஞ்சரி

வில்லியம் அங்க்லீஸ் பட்டமளிப்பு விழா 2018

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்துள்ள வில்லியம் அங்க்லீஸ் நிறுவனத்தில் விருந்தோம்பல் முகாமைத்துவ உயர்டிப்ளோமா பாடநெறியை கற்ற 10, 11, மற்றும் 12 ஆகிய மாணவர் குழுக்களுக்கான பட்டமளிப்பு விழா பிரபல கிரிக்கட்வீரர் குமார் சங்கக்கார தலைமையில் மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அக்சஸ் இன்டர்நெசனல் நிறுவனத்தின் தலைவர் சுமல் பெரேரா பங்கேற்ற இவ்விழாவின் வரவேற்புரையை அவுஸ்திரேலியாவின் வில்லியம் அங்க்லீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் நிக்கலஸ் ஹன்ட் நிகழ்த்தினார்.

120 டிப்ளோமாதாரிகள் இதன்போது சான்றிதழ்களைப் பெற்றதோடு விருந்தோம்பல்துறையில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, Shangri la, சினமன் கார்ட்ன், சினமன் ரிசோர்ட், வெலிகம பே, மெரியட் ரிசோர்ட் அன்ட் ஸ்பா, நெஸ்லே லங்கா அனுசரணையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

வில்லியம் அங்க்லீஸ் நிறுவனம் இதுவரை பல்வேறு பாடநெறிகள் ஊடாக 500 பட்டதாரிகள் மற்றும் 1200 அவுஸ்திரேலிய சான்றிதழ் பெற்றவர்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிறுவனத் தலைவரின் வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் தங்கப்பதக்கத்தினை வில்லியம் அங்க்லீஸ் நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய எரல்வீரசிங்கவிடமிருந்து செல்வி லிஹினி தியாகிமாரியா விமலசூரிய (10 ஆம் குழு) ஹிருணியாப்பா அபேவர்தன (11 ஆம் குழு) மற்றும் தோனமந்திரி அனுந்தரா ஹெட்டிஆரச்சி (12 ஆம் குழு) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

SLIIT உபவேந்தரும் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருமான பேராசிரியர் லலித்கமகே வாழ்த்துரை நிகழ்த்தினார். சகல பட்டதாரிகளும் வில்லியம் அங்க்லீஸ் நிறுவனத்தின் பூகோள சமூகத்துக்கும் பழைய மாணவர் சங்கத்துக்கும் சேர்த்துக்கொள்ளப்படுவதோடு மேற்படி வில்லியம் அங்க்லீஸ் அவுஸ்திரேலிய சான்றிதழதானது, சர்வதேசத்துக்கு பிரவேசிப்பதற்கான சிறந்த தகைமையாகும், விருந்தோம்பல் முகாமைத்துவம், வணிக ரீதியான சமையற்கலை, விழா முகாமைத்துவம் போன்ற பாடங்களில் பாடநெறிகளை நடாத்தும் வில்லியம் அங்க்லீஸ் நிறுவனமானது, 2019 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து பேஸ்ரி நிகழ்ச்சித்திட்ட மொன்றையும் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments