உள்ளார்ந்த தகவல்களை வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

உள்ளார்ந்த தகவல்களை வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் நிதிப் பெறுபேறுகள், பொதுச் செயற்பாடுகள், எதிர்காலத்திட்டங்கள் மற்றும் மூலோபாய செயற்பாடுகளின் நிலைவரங்கள் குறித்த பரிபூரண புரிந்துணர்வை முதலீட்டு சமூகத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்காக முதலீட்டாளர் அமர்வு (வெபினார்) ஒன்றை வங்கி ஏற்பாடு செய்திருந்தது. வருடத்தின் ஆரம்பம் முதல், வெபினார் ஊடாக முதலீட்டாளர் அமர்வுகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஏற்பாடு செய்திருந்தது, இதனூடாக வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு பங்குபற்றுவதற்கு இலகுவான, நெகிழ்ச்சியான கட்டமைப்பை வங்கி உருவாக்கியிருந்தது.

2018ஆம் ஆண்டின் முதல் அரையாண்டின் நிதிப் பெறுபேறுகள் குறித்து கவனம் செலுத்தியிருந்த முதலீட்டாளர் அமர்வு வெபினார், ஆகஸ்ட் 31ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரேணுகா பெர்னாண்டோ பிரதான விளக்கவுரையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நேரடி வினா, விடை அமர்வும் இடம்பெற்றது. முன்னணி வங்கியியல் அதிகாரிகள் அடங்கிய செயற்பாட்டாளர்கள் இந்த கேள்விகளுக்கு பதில்களை வழங்கினர். இந்த குழுவில், வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரேணுகா பெர்னாண்டோ, பிரதம நிதி அதிகாரி அஜித் அக்மீமன, நுகர்வோர் வங்கியியல் மற்றும் அட்டைகளுக்கான சிரேஷ்ட நிறைவேற்று பதில் தலைவர் பிரியந்த தல்வத்த, பிரதம செயற்பாட்டு அதிகாரி திலக் பியதிகம, நுகர்வோர் வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று பதில் தலைவர் ஹேமந்த குணதிலக ஆகியோர் அடங்கியிருந்தனர்.

Comments