5 நிமிடங்கள் மாத்திரம் சார்ஜ் செய்யும் OPPO F9 அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

5 நிமிடங்கள் மாத்திரம் சார்ஜ் செய்யும் OPPO F9 அறிமுகம்

Selfie Expert Md OPPO தனது புதிய F-தெரிவான OPPO F9 ஐ அறிமுகம் செய்துள்ளது. VOOC Flash Charging உடன் 5 நிமிடங்கள் மாத்திரம் சார்ஜ் செய்து, 2 மணித்தியாலங்கள் வரை தொலைபேசியில் உரையாடக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துறையின் முதலாவது Gradient Color Design ஐ கொண்ட F9, OPPOவின் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புத்தாக்கமான நிபுணத்துவத்துடன் பிரத்தியேகமான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 54,990 ரூபாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள OPPO F9, Sunrise Red மற்றும் Twilight Blue வெவ்வேறு வர்ணத் தெரிவுகளில் கிடைக்கும்.

துறையின் முதலாவது 6.3 அங்குல ‘Waterdrop Screen’ வடிவமைப்பு, 90.8% எனும் உயர்ந்தளவு திரை முதல் உடற்கட்டமைப்பு, பிரத்தியேகமான gradient color வடிவமைப்பு மற்றும் 3500 mAh பற்றரி ஆகியவற்றைக் கொண்ட OPPO F9 இனால் சிறந்த selfie திறனுக்கு மேலதிகமாக பல அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் ஒப்பற்ற அனுபவம், வேகமாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் பற்றரி சார்ஜ் போன்றன அடங்கியுள்ளன.

OPPO ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Bob Li இதன் அறிமுக நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில் OPPO F9 பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. OPPO இன் காப்புரிமையை பெற்ற துரித சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமான VOOC அம்சம் அடங்கியுள்ளது. இதனூடாக குறுகிய நேரத்தில் தொலைபேசியை சார்ஜ் செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். திரையில் waterdrop அலங்காரத்தை கொண்டுள்ளதுடன், இலங்கையின் தோற்றத்தை போன்ற அமைப்பில் இது காணப்படுகிறது.

இவ்வாறான ஒரு water-drop அலங்காரம் இலங்கையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையின் கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் மத்தியில் காணப்படும் பொதுவான பிரச்சினையாக பற்றரி ஆயுள் காலத்தை OPPO இனங்கண்டுள்ளது. இந்த பாவனையாளர்கள் மிகவும் முக்கியமான தருணங்களில் தமது தொலைபேசி பற்றரி திறன் குறைந்துபோன நிலையில் சிக்கலான நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவற்றை கவனத்தில் கொண்டு, OPPO F9 இல் VOOC Flash Charge அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Comments