நிகரற்ற உயரத்தில் அடியெடுத்து வைக்கத்தயாராகும் Drive One | தினகரன் வாரமஞ்சரி

நிகரற்ற உயரத்தில் அடியெடுத்து வைக்கத்தயாராகும் Drive One

Audi வாகனங்களின் விநியோகத்தினை கடந்த ஆண்டு பொறுப்பேற்ற Drive One (Pvt) Ltd நிறுவனம் Audi வாகன நாமத்தினை இலங்கையில் உச்சத்திற்கு கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. Audi AG Germany நிறுவனத்தின் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தியசேவை, அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் துணை (accessories) பாகங்களுக்கான உத்தியோகபூர்வ பிரிதிநிதியாக Drive One (Pvt) Ltd இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளது.

Drive One (Pvt) Ltd, நிர்வாக இயக்குனர் ஹிரான் டி சில்வா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், Audi வணிக நாமத்தை இலங்கையில் பிரதிநிதித்துவம் செய்வதையிட்டு Drive One நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது. வாடிக்கையாளர்களே எமது பிரதான நோக்கு என்பதுடன் நீண்டகால உறவினை சிறப்பான சேவை ஊடாக கட்டியெழுப்புகின்றோம். 2020 ஆண்டளவில் தேசத்தின் சிறந்த மோட்டார் வாகன நாமமாக Audiயினை மாற்றும் அர்ப்பணிப்புடன் Drive One நிறுவனம் செயற்படுகின்றதுஎன்றார்.

Drive One அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனைக்கு பிந்திய சேவையை வழங்குகின்றது. விற்பனைக்கு பிந்திய மற்றும் தொழில்நுட்ப உதவி சேவைகள் உட்பட Audi AG’s top diagnostic information systems தகவல் மையத்திற்கான அனுமதியை இந்நிறுவனம் கொண்டுள்ளது. அதாவது Drive One தொழில்நுட்ப அணிக்கு வாகனத்தின் பராமரிப்பு விபரம், வேலைத்தள குறிப்பேடுகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், மென்பொருள் மேம்படுத்தல், பராமரிப்பு இலக்குகள் ஆகிய தகவல்களை தமது நிறுவனத்தின் ஊடாக மட்டும் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கமுடியும்.

கடந்த அக்டோபரில் Audi விநியோக உரிமையை பொறுப்பேற்றது தொடக்கம் Drive One பல நவீன மாற்றங்களையும் முதலீடுகளையும் Audi வணிக நாம மேம்பாட்டிற்காக ஏற்படுத்தியுள்ளது.

அதிநவீன பழுதுபார்க்கும் பராமரிப்பு நிலையம், மற்றும் விற்பனைக்கு பிந்திய சேவை என்பன அதில் அடங்கும். 24 மணிநேர வீதியோர உதவிசேவை, ஊழியர் பயிற்சிகளில் முதலீடு, சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அலுவலக விஸ்தரிப்பு என்பனவும் மேலதிக இணைப்புகள் ஆகும்.

Comments