சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு அனுசரணையளித்த | தினகரன் வாரமஞ்சரி

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு அனுசரணையளித்த

GlaxoSmithKline (GSK) ஆனது பனடோல் மற்றும் அயோடெக்ஸ் வர்த்தக நாமங்களின் மூலம், அதன் சுவ சஹன முன்னெடுப்பின் மூலம், ஆயிரக்கணக்கான சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு நிவாரணமளித்துள்ளது.

வாழ்க்கை வலியானதாக அமைந்து விடாமல், GSK ஆனது, பனடோல் மற்றும் அயோடெக்ஸ் என்பனவற்றின் ஊடாக, நான்கு வார காலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரீகர்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் கொடுத்து, ஆறுதலளித்தது. பல்வேறுபட்ட வசதிகளோடு, நல்லதண்ணி சாம சைத்தியவில் நிவாரண முகாம் நிறுவப்பட்டது.

இதன் மூலம் எல்லா யாத்திரிகர்களுக்கும் முதலுதவி சிகிச்சைகளும், வலி நிவாரணங்களும் அளிக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக, இந் நிவாரண வலயம், அயோடெக்ஸ் மற்றும் ஹெட்ஃபாஸ்ட் என்பனவற்றைப் பயன்படுத்தி கால்கள் மற்றும் தலைக்கான மசாஜ்களையும் வழங்கியது. மருந்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட படி பனடோல் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

பனடோல் மற்றும் அயடெக்ஸ்என்பனவற்றை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் Glaxo SmithKline இன் சுவ சஹன நிவாரண மருத்துவ முகாமானது, இலங்கையில் நடைபெறும் அனைத்து பிரதான சமய, கலாசார நிகழ்வுகள், பெருநாட்கள் என்பனவற்றில் முக்கிய பங்குவகித்துள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு மேலதிகமாக, GSKயின் சுவ சஹன முன்னெடுப்பானது, அனுராதபுரம், தந்திரிமலை ஆகியவற்றில் ஜுன் மற்றும் ஜுலைமாதங்களில் நடைபெறும் சமய நிகழ்வுகளுக்கும் அனுசரணை வழங்க எண்ணியுள்ளது. இத்திட்டமானது மில்லியன் கணக்கான இலங்கையர்களின் இதயத்தை வென்றுள்ளதோடு, GSKஅதன் சமூக சேவைகளைத் தொடரவும் வருடந்தோரும் அவற்றை விரிவாக்கவும் ஊக்கமளித்துள்ளது.

Comments