வோக்கர்ஸ் CML இன் Havelock Heights சொகுசு இல்லங்கள் | தினகரன் வாரமஞ்சரி

வோக்கர்ஸ் CML இன் Havelock Heights சொகுசு இல்லங்கள்

வோக்கர்ஸ் CML நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட கண்கவர் அடுக்குமாடித் தொடரான Havelock Heights, கட்டட நிர்மாணத்துறையில் நாட்டின் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கொழும்பு வாழ்க்கையை தரமுயர்த்தி, கொழும்பு நகரின் வான்பரப்பை அழகுபடுத்தும் வகையில் இந்த அடுக்குமாடி வீடமைப்புத் தொடர் அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முக அமைப்பைக் கொண்டுள்ள இந்த 32 மாடி கட்டடம், கவர்ச்சியான முறையில் வடிவமைக்கப்பட்ட 384 அடுக்கு மாடி வீடுகளைக் கொண்டுள்ளது.

ஒரே கூரையின் கீழ் அனைத்து தேவையான சகல வசதிகளையும் கொண்டுள்ள Havelock Heights பாதுகாப்பான ஒரு வாசஸ்தலமாகும். அத்துடன் கொழும்பின் பிரதான நிலையத்தில் அமைந்திருப்பதால், வங்கிகள், பாடசாலைகள், அலுவலகங்கள் என்பனவற்றுக்கு இலகுவில் பிரவேசிக்க முடியும். இவற்றின் விலை சகலருக்கும் கொள்வனவு செய்யக்கூடிய நியாயமான விலைகளில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மூன்று வகையான வீடமைப்புக்களைக் கொண்டுள்ள Havelock Heights ஒரு படுக்கையறை, இரண்டு படுக்கையறைகள், மூன்று படுக்கையறைகள் என்ற வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

Havelock Heights வீடமைப்புத் தொகுதி, மிகவும் இலாபகரமான, அனைவருக்கும் பொருந்தும் வகையிலான விலைகளில், அதாவது, 14.5 மில்லியன் ரூபாவிலிருந்து ஆரம்பமாவதுடன் செலுத்தும் பணத்திற்கு மிகவும் பெறுமதியான ஒரு முதலீடாகும். இங்கு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப கொடுப்பனவு முறைகளை அமைத்துக்கொள்ளலாம். தொடர்ச்சியாக காணப்படும் கேள்வியின் காரணமாக, Havelock Heights; 50% வீடுகள் கட்டுமாணப் பணிகள் முடிவடைய முன்னரே விற்பனை செய்யத் தயாராகியுள்ளது.

Walkers CML Group of Companies நிறுவனத்தினால் அமைக்கப்படும் Walkers CML குழுமத்தின் CS2 வகுப்பை அடைந்துள்ள, இவ்வீடமைப்புத் தொகுதி, CML MTD Construction limited நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் கட்டுமாணத் துறையில் வழங்கப்பட்டுள்ள மிகச்சிறந்த விருதாகும். 160 வருடங்களையும் தாண்டிய பொறியியல் வரலாற்றைக் கொண்ட வோக்கர்ஸ் CML நிறுவனம், தொழிற்றுறையின் சிறந்த வழிமுறைகளையும், பாதுகாப்பு முறைமைகளையும் பின்பற்றுவதனால் அதன் அனைத்து திட்டங்களும் மிகச்சிறந்த செயற்தினைப் பெற்றுக்கொடுத்துள்ளன.

 

Comments