எட்டாவது நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுக்கான விண்ணப்பம் கோரல் | தினகரன் வாரமஞ்சரி

எட்டாவது நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுக்கான விண்ணப்பம் கோரல்

முகாமைத்துவத்தில் பெண்கள் (WIM), சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து மிகச்சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருது 2018 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எட்டாவது தடவையாக பெண்களின் தலைமைத்துவத்தையும் தமது தொழில்துறையில் கொண்டிருக்கும் திறமை, வர்த்தகம் மற்றும் அன்றாட வாழ்க்கை என்பவற்றில் காண்பிக்கும் சிறப்புக்களையும் அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது அமையவுள்ளது.

நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருது நிகழ்வை தொடர்ச்சியாக நான்காவது தடவையும் நடத்துவதற்காக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) மற்றும் முகாமைத்துவத்தில் பெண்கள் (WIM) ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.

இலங்கையில் சிறிய மற்றும் நுண் வர்த்தகத் துறைகளில் பங்கேற்று தலைமைதாங்கும் பெண்களுக்குத் தேவையான ஆற்றல் கட்டமைப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை வழங்குவதில் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) மற்றும் முகாமைத்துவத்தில் பெண்கள் (WIM) ஆகிய நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்த முயற்சிகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தினால் (IFC) நடைமுறைப்படுத்தப்படும் தொழிலில் பெண்கள் (Women in Work) செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகும்.

முகாமைத்துவத்தில் பெண்கள் (WIM) அமைப்பின் ஸ்தாபகரும் தலைவியுமான டொக்டர் சுலோச்சனா செகேரா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், பெண்களை உலகத்துக்கு அழைத்துச் செல்லல் என்ற தொனிப்பொருளின் இலக்கை அடைந்திருப்பதாக நம்புகின்றோம் என்றார்.

கடந்த ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக, பெருநிறுவனங்கள் தொடக்கம் அடிமட்டம் வரையிலுள்ள விதிவிலக்கான பெண் தலைமைத்துவங்களை அடையாளங்கண்டு WIM அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது விருதுகளைப் பெற்றவர்கள் தமது தொழில்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த தொடர்ச்சியாக வழங்கிவரும் தலைமைத்துவத்தைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைவதாக மேலும் குறிப்பிட்டார்.

Comments