தூய லூர்து அன்னையின் வருடாந்த திருநாள் இன்று | தினகரன் வாரமஞ்சரி

தூய லூர்து அன்னையின் வருடாந்த திருநாள் இன்று

பாலையூற்று பிரதேசம் திருகோணமலை நகரிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. தூய லூர்து அன்னை ஆலயம் பாலையூற்று பிரதேசத்தில் அமைந்துள்ளதால், “பாலையூற்று லூர்து அன்னை” என்று அழைக்கப்படுவது வழமையாகும்.

தூய லூர்து அன்னை அப்பகுதியில் பல அற்புதங்களை அடியார்களுக்கு அள்ளி வழங்குவதால் அவரை நாடி வருவோரின் எண்ணிக்கை கூட வருடா வருடம் அதிகரித்து வருவதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

கடந்த பங்குனி 18ஆம் திகதி வருடாந்த திருநாளின் அடையாளமாக தூய அன்னை லூர்துவின் திருவுருவம் பதித்த திருநாள் கொடி ஆலய வளவில் மிக அமர்க்களமாக ஏற்றிவைக்கப்பட்டது.

அன்னை லூர்து அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் தனது அருளை அள்ளி வழங்க என்றுமே பின்நிற்பதில்லை. குறிப்பாக அன்று நாடுபூராகவும் பரவி அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொண்ட கொடிய ஆலய வளவில் மிக அமர்க்களமாக ஏற்றிவைக்கப்பட்டது.

அன்னை லூர்து அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் தனது அருளை அள்ளி வழங்குவதில் என்றுமே பின்நிற்பதில்லை. குறிப்பாக அன்று நாடுபூராகவும் பரவி அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொண்ட கொடிய அம்மை நோயில் இருந்து சகலரையும் காப்பாற்றியதை எவரும் எளிதில் மறந்து விட முடியாது.

அன்று அன்னை லூர்துவின் முகம் பார்த்து மனமுருக தனது பிரார்த்தனையை முன்வைத்தவர் காலம் சென்ற ஹெம்பேக்கர் அடிகளார் அவர்களே. இன்றைய திருநாளில் அவருக்கு நன்றி கூற சகலரும் கடமைப்பட்டுள்ளனர்.

அன்னை லூர்துவுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டுமென்பதற்காக பாலையூற்றுப் பகுதியில் அன்னைக்கு ஆலயம் ஒன்றை அமைக்கும் பணியில் அவர், தீவிரமாக, செயல்பட்டார்.

அவரின் முயற்சி வீண் போகவில்லை கொடிய மிருகங்கள் வாழ்ந்த கானத்தில் அன்னைக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. மக்கள் அன்னையின் ஆலயப் பகுதியை அண்டி வாழ ஆரம்பித்தலும் அங்குள்ள கொடிய மிருகங்கள் எங்கேயோ ஓடி சென்றுவிட்டன.

ஆரம்பத்தில் அங்கு குடியரமச் சென்ற மக்களுக்கு அங்குள்ள மிருகங்களால் சில தொல்லைகள் இருந்தன. ஆனால் அன்னையின் அற்புதத்தால் நாளடவில் அந்த கொடிய மிருகங்களின் தொல்லைகள் குறைய ஆரம்பித்தன.

அதன் பின் ஆலயத்தின் அபிவிருத்தி வேலைகள் அங்குள்ள மக்களால் முன்னெடுத்து செல்லப்பட்டதால், ஆலயம் உரிய வசதிகளை நாலுக்கு நாள் பெற்றுக் கொண்டது. காலத்திற்கு காலம் அன்னையின் ஆலய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்படும் குருமார்களின் தன்னலமற்ற சேவைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் பல பிரசித்தம் பெற்ற, பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் பாலையூற்று அன்னை லூர்துவின் ஆலயமும் ஒன்றாகும். தற்பொழுது கணிசமான அடிப்படைத் தேவைகள் அங்கு பூரணப்படுத்தப்பட்டுள்ளன.

அங்குள்ள பொதுமக்களின் பங்களிப்பை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. தற்பொழுது பாலையூற்று பங்கு தந்தையாக அருட்பணி மதுரங்கன் குருஸ் அடிகளின் கடமையாற்றுகிறார்.

அவரின் சேவைக்காலத்தில் பல பயன்மிகு கருத்திட்டங்கள் செயலுருவம் பெற்றுள்ளன. மேலும் அங்குள்ள பொதுமக்களின் உதவியுடன் பல பயன்மிகு வேலைத்திட்டங்கள் மூலம் அடிப்படைத் தேவைகளை முழமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலய மேம்பாட்டுக்காக பல சபைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறான சபைகள் உண்டு அங்குள்ள மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், ஆகியவற்றின் அடிப்படையிலே ஆலய அபிவிருத்தி வேலைகள் அமுல்படுத்தப்பட்டுவருவது விசேடமாக குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் முரண்பாடுகளை தவிர்த்து அங்குள்ள பொதுமக்கள் பங்குத் தந்தையுடன் இரு கரம் கோர்த்து செயல்படுவதன் காரணமாக எந்த விடயங்களும் தங்கு தடையின்றி முன்கொண்டு செல்லப்படுகின்றன. திருநாள் நடவடிக்கைகள் கூட பங்குத் தந்தையின் வழிகாட்டில் மூலம் இடம்பெற்றன.

இன்றைய திருவிழா கூட்டுப்பலி திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவந்தனத்துக்குரிய நோபல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படுகின்றது.

அன்னையின் திருநாள் அடையாளமாக 18.05.2018ம் திகதி ஏற்றப்பட்ட கொடியை அடுத்து அன்னையின் ஆலயத்தில் 9 நாட்கள் நோவினாக்கள் இடம்பெற்றன. அந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராதனைகளில் ஏனைய பங்கு மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நோவினா நாட்களில் ஆற்றப்பட்ட மறை பிரசங்கங்கள் சகலரையும் கவர்ந்திருந்தமை விசேடமாக குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்துவதே முதியோர்களின் விசேட கடப்பாடாகும் ஏனெனில் நாளைய உலகம் இன்றை இளம் சந்ததியினரை நம்பியே உள்ளது.

ஆத்மீக நெறிமுறைகள் இன்று அழிந்து போவதை நாம் நன்கு அறிவோம்.

புதிய புதிய போதைவஸ்துக்களின் நடமாட்டங்கள் எங்கும் வியாபித்துள்ளன. “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்று” யாவருக்கும் நன்கு தெரிந்த உண்மையான வார்த்தையாகும்.

இன்று நமது நாட்டின் குற்றச் செயல்களின் விகிதாசாரம் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆட்சியாளர்கள் கூட பல சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அன்னையின் வருடாந்த உற்சவம் இன்றுடன் முடிவுற்றாலும் அவரின் அருளும் ஆசியும் சகல மக்களுக்கும் தேவையானதே, இறை வணக்கத்தினால் சாதிக்க முடியாதவை ஒன்றுமில்லை.

எமது குறைகள் நீக்கப்பட்டு எமது தேவைகள் பூர்த்தியினால் அதுவே போதுமானதாகும் நோயாற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் இருந்தால் எமது வாழ்வில் பிரச்சினைகளுக்கு ஏது இடம்?

நாடு சுபீட்சமடைய வேண்டும் நாட்டு மக்கள் சகல சௌபாக்கியங்களுடன் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும், வாழவேண்டுமென்பதே இன்றைய திருநாளில் விசேட பிரார்த்தனையாக அமையட்டும்.,

“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் புரிய எனக்கு ஆற்றல் உண்டு”

(பிலி 4:13).

பாலையூற்று மரியதாஸ்

Comments