கட்டடங்களில் அனர்த்தம் நிகழ்ந்தால் உயிர்களுக்கு உத்தரவாதமளிப்பது யார்? | தினகரன் வாரமஞ்சரி

கட்டடங்களில் அனர்த்தம் நிகழ்ந்தால் உயிர்களுக்கு உத்தரவாதமளிப்பது யார்?

போல் வில்சன்

 

கொழும்பு, கிராண்ட்பாஸில் கடந்த வாரம் இடம்பெற்ற தேயிலை களஞ்சிய கட்டடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் ஏழு பேர் மரணித்துள்ளனர். மூவர் படுகாயங்குள்ளாகியுள்ளனர். மரணித்தவர்களில் கட்டட உரிமையாளரும் அடங்குவார். இச்சம்பவம் அதிகளவானாரின் கவனத்தை ஈர்ந்துள்ளது.

கொழும்பின் அடையாளமாக அதிகளவான பழமைவாய்ந்த கட்டடங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பிரதான வீதியில் காணப்படும் பழைய நகர மண்டப கட்டடம், கொழும்பு கோட்டை அவுஸ்திரேலிய கட்டடம், கோட்டையிலுள்ள டச் ஆஸ்பத்திரி, கார்கிள்ஸ் கட்டடம், கொழும்பு வாட் பிளேஸிலுள்ள விபத்துச் சேவை ஆஸ்பத்திரியின் பழைய கட்டடம், கொழும்பு ரோஸ் கோஸ் உட்பட அதிகளவான கட்டடங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு புதிய பொலிவுடன் காணப்படுகின்றன. அவைகளின் உறுதிதன்மையும் மீள உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் பெருகிவரும் சனத்தொகைக்கேற்ப கட்டடங்கள் உருவாகுவதும் அதேநேரத்தில் கடந்த காலங்களில் அரச தீர்மானத்திற்கு ஏற்ப கொழும்புக்கு வெளியே கொள்கலன் களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் கொழும்பு கிராண்ட்பாஸ், ஐந்தாம், நான்காம் குறுக்கு தெரு, புளுமெண்டால் வீதி உட்பட பல இடங்களில் களஞ்சியசாலைகள் இருக்கின்றன. இக்கட்டடங்கள் மிகவும் பழமைவாய்ந்தவையாகவும் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டியவையாகும். அதிகளவான வருமானத்தை எதிர்பார்த்து இக்களஞ்சியசாலைகளை இயக்குகின்றனர்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே ரயில்வே திணைக்களத்துடன் இணைக்கப்பட்ட பல பகுதிகள் களஞ்சியசாலைகளாகவே காணப்பட்டன. அதன் பின்னர் அவை படிப்படியாக அகற்றப்பட்டுவிட்டாலும் கொழும்பு மானிங் சந்தை அக்களஞ்சிய கட்டடப் பகுதியே புறக்ேகாட்டை பொது சந்தையாக மாற்றியமைக்கப்பட்டது.

கிராண்ட்பாஸ் தேயிலைக் களஞ்சியசாலையும் சுமார் நூற்றி அறுபத்தாறு வருடங்கள் பழமைவாய்ந்ததென்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் இக்கட்டடத்திற்கு அருகில் பிறிதொரு பழைய கட்டடமொன்றின் நிர்மாணப் பணிகள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அந்த பகுதியிலிருந்த சுவருடன் முழுமையாக இந்தக் களஞ்சியசாலையின் கூரைகள் உடைந்து விழுந்து இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இடிந்துவிழுந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட சதியென்று கட்டட உரிமையாளரின் பெறாமகளான ஃபரீதா சபீர் கொழும்பு நகர திடீர் மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அனர்த்தத்தில் பலியான கட்டட உரிமையாளர் தனது சித்தப்பா என்றும். இச்சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் காலை அவர் சட்டத்தரணியுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று கூட்டு வியாபார பணக் ெகாடுக்கல் வாங்கல் பற்றி முறைப்பாடொன்றை செய்துள்ளார். அன்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார். அத்துடன் குடும்பச் சொத்துப் பிரச்சினை சம்பந்தமாக மாளிகாவத்தை நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பொலிஸார் பலகோணங்களிலும் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

கொழும்பிலும் கொழும்பிற்கு வெளியேயும் அதிகளவான நூற்றாண்டு காலத்திற்குப் பிந்திய கட்டடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு காலத்திற்குக் காலம் அவை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதினால் அவைகளின் உறுதித்தன்மை பேணப்படுகிறது. ஆனால் பழமை வாய்ந்த இந்த கட்டடங்கள் குறித்து அரசாங்கமும் கொழும்பு நகர அபிவிருத்தி அமைச்சும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இங்கு தொழில் செய்பவர்களுக்கு அனர்த்தப் பாதுகாப்பு, காப்புறுதி உள்ளதா என்பது அரச அதிகாரிகளினால் உறுதிப்பத்தப்பட வேண்டும். இங்கு தொழில் செய்யும் அதிகளவான தொழிலாளர்கள் நாளாந்த சம்பள அடிப்படையிலேயே ஊதியம் பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த வருடம் மே மாதமளவில் வெள்ளவத்தை பகுதியில் ஐந்துமாடி கட்டடமொன்று இடிந்து விழுந்தது. இதேபோன்று இலங்கையில் சில இடங்களில் கட்டடங்கள் இடிந்துவிழுந்த அனர்த்தங்கள் பதியப்பட்டிருந்தாலும் அதிகளவு உயர்களைக் காவுகொண்ட சம்பவமாக கிராண்ட்பாஸ் களஞ்சியசாலை பதியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கொள்ளுப்பிட்டியிலுள்ள பல அடுக்குமாடி கட்டடத்திற்கு அருகில் பிறிதொரு கட்டடம் கட்டும்பணிக்காக பாரிய குழிதோண்டப்பட்டு, கட்டடத்திற்கான பைலிங் அடிக்கப்பட்டது. அப்போது அருகிலுள்ள புதிய அடுக்குமாடி கட்டடத்தில் ஆங்காங்கே பாரிய வெடிப்புக்கள் உருவாகின. இதனை அந்த கட்டட ஒப்பந்தக்காரர் கண்டுக்ெகாள்ளவே இல்லையாம்.

அதன்பின்னர் புகார் அளிக்கப்பட்டது. இது உதாரணமானாலும் ஒரு கட்டடத்திற்கு அருகில் பிரிதொரு கட்டடம் கட்டும்பணி ஆரம்பிக்கப்படும் போது அங்கு தோண்டப்படும் குழி, நிலத்தில் அடிக்கப்படும் பைலிங் என்பன அருகிலுள்ள கட்டங்களை அதிர்வுக்குள்ளாக்கும் என்பது முக்கியம் பெறுகிறது. அதேபோன்று அடுத்தடுத்து வீடுகளைக் கொண்ட பகுதிகளும் இதேபோன்று புனர்நிர்மாணம் செய்யும் போது அல்லது புதிதாக சுவர் எழுப்பும் போதும் அருகிலுள்ள கட்டடத்திற்கு சேதம் உருவாகும் என்பதும் குறிப்பிட வேண்டும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குநர் ரணதுங்கவிடம் இது குறித்து வினவிய போது, 'இது அருகிலுள்ள ஒரு கட்டட நிர்மாணப் பணியினால் ஏற்பட்ட ஒரு விபத்தாகவே பார்க்கிறேன். இது குறித்து கட்டட ஒப்பந்தக்காரர் அல்லது மேற்பார்வையாளர் பொறுப்பு கூற வேண்டியவர்கள்' என்று கூறினார். இக்கட்டடங்கள் தன்மையைக் குறித்து எதிர்காலத்தில் ஆராயப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகரில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத கட்டடங்கள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நான்காயிரம் சதுர அடி பரப்பளவுக்கும் அதினமானதும் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியைப் பெறுவது அவசியமானது எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆய்வு மையத்தின் அதிகாரிகள் கட்டட இடிபாடுக்கான காரணம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. கிராண்ட்பாஸ் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள கட்டடம் திருத்த வேலை காரணமாக, அக்கட்டடத்தின் மதிலை அகற்றும் போது அம்மதில் குறித்த கட்டடத்தின் மீது விழுந்து அனர்த்தத்திற்குள்ளாகியதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இக்கட்டத்தின் மதிலை அகற்றும் போது உரிய பாதுகாப்பு நடவடிைக களை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதும் கட்டட ஆய்வு மைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிதாக கட்டப்படும் கட்டடம், பழைய கட்டடத்தின் கூரை திருத்தம், சுவர்கள் அல்லது புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தும் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கையாள வேண்டியது கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர் அல்லது மேற்பார்வையாளர்களின் கடமையாகும். அதேநேரத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதிகள், காப்புறுதி வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியதும் கடமையாகும்.

எதிர்காலத்தில் இவ்விதமான கட்டட விபத்துக்களை தவிர்ப்பதற்கு அரசாங்கமும் உயர் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு விபத்துகளை தவிர்த்தல் வேண்டும். கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் மிகவும் பழமையான கட்டடங்களைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான விபத்துக்களிலிருந்து இம்மக்களை பாதுகாக்க அவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். 

Comments