Lanka Hospitals Diagnosticsக்கு மருத்துவ ஆய்வுகூட தரச்சான்று அங்கீகாரம் | தினகரன் வாரமஞ்சரி

Lanka Hospitals Diagnosticsக்கு மருத்துவ ஆய்வுகூட தரச்சான்று அங்கீகாரம்

Lanka Hospitals Diagnostics (LHD) இற்கு மருத்துவ ஆய்வுகூட நடைமுறைகளில் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் தரத்தைப் பேணி வருவதற்கு தரச்சான்று அங்கீகாரமளிக்கும் வகையில் College of American Pathologists (CAP) இடமிருந்து மதிப்புமிக்க தரச்சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

CAP தரச்சான்று அங்கீகாரத்தை இலங்கையில் பெற்றுள்ள முதலாவது, மருத்துவ ஆய்வுகூடம் என்ற தனிச்சிறப்பை Lanka Hospitals Diagnostics அடைந்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள 7,000 வலுவான CAP தரச்சான்று அங்கீகாரம் பெற்றுள்ள ஆய்வுகூடங்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. நோயாளர்களுக்கு வழங்கி வரும் அதி சிறந்த தரத்திலான சேவைகளை அங்கீகரிப்பதாக இது அமைந்துள்ளது. இதற்கிடையில், இலங்கை தரக்கட்டளைகள் சபையால் (SLAB) 2009 ஆம் ஆண்டில் மருத்துவ ஆய்வுகூடங்களின் ISO 15189 தர நடைமுறைகளுக்காக முதன்முதலாக தரச்சான்று அங்கீகாரத்தை சம்பாதித்த பெருமையும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ஆய்வுகூடத்தையே சாரும்.

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோர்ப்பரேஷன் பீஎல்சி இன் பணிப்பாளர் சபைத் தலைவரான வைத்தியர் சரத் பரணவிதான கூறுகையில், சர்வதேச தரச்சான்று அங்கீகாரத்தில் தங்கத் தரத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகின்ற சான்று அங்கீகாரத்தை College of American Pathologists அமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதன் மூலமாக, எமது நோயாளர்களுக்கு நம்பகமான மற்றும் துல்லியமான மருத்துவ அறிக்கைகளை வழங்கி, நோய் அறிகுறியைக் கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சை தொடர்பான தரத்தை மேம்படுத்துவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை Lanka Hospital Diagnostics நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஆய்வுகூடத்தின் பெறுபேறுகள் தொடர்பில் கடந்த இரு ஆண்டுகளாக CAP தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ள மீளாய்வின் பின்னணியில் இந்த சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வுகூட நடைமுறைகள் தொடர்பில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வண்ணம் CAP இனால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல் விதிமுறைகளை கண்டிப்பாகப் பேணி, வழங்கப்படுகின்ற ஒவ்வொரு பரிசோதனையின் பெறுபேறுகளையும் சரிபார்ப்பதற்கு விரிவான ஆய்வுகூட பரிசோதனைகளின் ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் பிரதானமாக முக்கியத்துவம் வகிக்கின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து சோதனைகளுக்கும் CAP இனால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற உலகளாவிய வெளியார் தர மதிப்பீட்டுத் திட்டத்தில் பங்குபற்றி வருவதன் மூலமாக LHD இற்கு மிகச்சிறந்த அளவில் மதிப்பீட்டுப் புள்ளிகள் கிடைத்துள்ளன. 

Comments