முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 866 மில்லியனை பதிவு செய்த செலான் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 866 மில்லியனை பதிவு செய்த செலான் வங்கி

செலான் வங்கியானது நிச்சயமற்ற சந்தை நிலைவரங்களுக்கு மத்தியிலும் 2017 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 866 மில்லியனை பெற்று, சிறப்பான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்ததன் மூலம் இந்த ஆண்டை உறுதிமிக்க வகையில் ஆரம்பித்திருக்கின்றது.

வங்கி தனது தேறிய வட்டி வருமானத்தை அதிகரித்துக் கொண்டுள்ளதுடன், ஆதாய எல்லைகள் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டிருந்த நிலைமையிலும் கூட 20.97% அதிகரிப்பை வங்கி பெற்றிருக்கின்றது. எவ்வாறிருப்பினும், தேறிய வட்டி எல்லையானது 4.19%இலிருந்து 3.92% ஆக சிறிதளவு குறைவடைந்தது.

கடன்களின் மீள் விலையிடலை விடவும் வேகமான அடிப்படையில் வைப்புக்களின் கிரயங்கள் அதிகரித்தமையே இதற்கு காரணமாகும்.

கடந்த வருடத்தில் இதனுடன் தொடர்புபட்ட காலத்தில் ரூபா 695 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட வங்கியின் தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 2017 இன் முதலாம் காலாண்டில் ஆரோக்கியமான விதத்தில் 24.94% வளர்ச்சியடைந்து ரூபா 869 மில்லியனாக அதிகரித்தது. இது அட்டைசார் வருமானம், வர்த்தக நிதிசார் கட்டண வருமானம் மற்றும் உத்தரவாதங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற கட்டணம், பணவனுப்பல்கள் போன்ற மைய வங்கியியலுடன் தொடர்பான வியாபார நடவடிக்கைகளின் காரணமாக மேற்படி வருமான அதிகரிப்பு ஏற்பட்டது. இதேவேளை, வரவு மற்றும் கடன் அட்டைகள் மற்றும் வணிகத்துடன் தொடா்புபட்ட சேவைகளின் ஊடாக தனது கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு வங்கி தொடர்ந்தும் எதிர்பாரத்துள்ளது.

வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள், நிதி முதலீடுகளில் இருந்தான ஆதாயங்கள், அந்நிய செலாவணியின்் மீது கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது 2016 இன் முதலாம் காலாண்டில் ரூபா 68 மில்லியன் நட்டமாக காணப்பட்டிருந்த நிலையில், 2017 இன் முதலாம் காலாண்டில் தேறிய ஆதாயம் ரூபா 299 மில்லியனாக அதிகரித்திருக்கின்றது. 

Comments