சிறந்த ந-வ வணிக வர்த்தக நாமங்களில் ஒன்றாக 'MyShop.lk' தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த ந-வ வணிக வர்த்தக நாமங்களில் ஒன்றாக 'MyShop.lk' தெரிவு

வளர்ந்துவரும் ந-வ வணிக இணையத்தளங்களில் ஒன்றான Myshop.lk, நாட்டில் காணப்படும் சிறந்த e-வணிக இணையத்தளங்களில் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 3 விற்பனை சேவைகள் வழங்குநர்களில் ஒன்றாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தது. LMD இன் வருடாந்த வர்த்தகநாம தரப்படுத்தல்களின் போது இது வழங்கப்பட்டிருந்தது.

இரு வருடங்கள் வியாபாரத்தில் காணப்பட்ட இந்த இணையத்தளம்,வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யத்தைப் பெற்றுள்ளதுடன், பரந்தளவு சேவைகள், பொருட்கள், செலுத்தும் பணத்துக்குபெறுமதி, குறித்தகாலத்தில் விநியோகம், இலகுகொடுப்பனவு முறைகள் மற்றும் சிறந்தவாடிக்கையாளர் சேவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தமது சாதனை குறித்து MyShop.lk இன் முகாமைத்துவ பணிப்பாளர் அஹமட் பர்ஸான் கருத்துத் தெரிவிக்கையில்,இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த-வணிக வர்த்தகநாமங்களில் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டதையிட்டுநாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறுகிய இருவருடகாலப்பகுதியில் நாம் மிக நீண்ட தூரம் பயணித்துள்ளோம்.

எமது வாடிக்கையாளர்கள் எம்மீது காண்பித்திருந்த ஈடுபாடுமற்றும் எமது ஊழியர்கள் எம்முடன் இணைந்து செயலாற்றுவதில் காண்பித்திருந்த அர்ப்பணிப்பு ஆகியன எமது வளர்ச்சிக்கு முக்கிய பங்கை ஆற்றியிருந்தது. துறையில் எமது செயற்பாட்டை ஆரம்பித்து குறுகிய காலப்பகுதியில், எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் நேர்த்தியான நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

இலங்கையில் ஒன்லைன் காட்சியறை அடிப்படையிலான சொப்பிங் அனுபவத்தை வழங்குவதில் MyShop.lk முன்னணியில் திகழ்கிறது. ஒன்லைனில் காட்சிப்படுத்தப்படும் சகலபொருட்களும், எவ்வேளையிலும் அவர்களின் விற்பனை களஞ்சியப்பகுதியில் கையிருப்பில் இருக்கும். ஏனெனில், வாடிக்கையாளர்களுக்கு தேவையெனில், இந்த விற்பனை களஞ்சியப் பகுதிக்குவிஜயம் செய்து, தாம் ஒன்லைனில் பார்வையிட்ட அதேபொருளை கொள்வனவு செய்வதை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. 

Comments