டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் முதனிலை வீராங்கனையாக விளங்கும் செரீனா வில்லியம்ஸ்கும் ரெடிட் சமூகவலைதளத்தின் துணை நிறுவனரான அலெக்ஸ் ஒஹானிக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்தம் நடைபெற்றது. இருவருக்கும் இன்னும் திருமணம் நடைபெறாத நிலையில் தற்போது தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக செரீனா சமூகவலைதளத்தில் தனது புகைப்படத்தை போட்டு உறுதி செய்துள்ளார்.
புகைப்படத்தை பதிவேற்றிய சில மணி நேரம் கழித்து அதை அவர் நீக்கி விட்டார்.
இது குறித்து செரீனாவின் செய்தி தொடர்பாளர் கெல்லி கூறுகையில், செரீனா கர்ப்பமாக உள்ளது உண்மை தான்.
இந்த வருடம் அவர் எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டார். அடுத்த வருடம் மீண்டும் விளையாட வருவார் என தெரிவித்துள்ளார். இதனிடையில் செரீனா பதிவேற்றிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.