Home » நாமல் உயனவை பாதுகாக்கும் வனவாசி ராகுல தேரர்

நாமல் உயனவை பாதுகாக்கும் வனவாசி ராகுல தேரர்

by Damith Pushpika
May 5, 2024 6:51 am 0 comment

சிறப்பு அதிதிகள் நிறைந்திருந்த விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த தேரர் திடீரென தனது உரையை நிறுத்தினார். அவருடைய கண்கள் சபைக்கு வந்து கொண்டிருந்த ஒரு விருந்தினரை நோக்கி இருந்தது. அதே சமயம் அவர் அழவும் ஆரம்பித்தார். அவரது பேச்சில் அந்த அழுகை குறுக்கிட்டதும், சபையோரும் கலங்கினர். சபையில் வீற்றிருந்த அதிதிகள் பலரது உள்ளங்களில் பொக்கிஷமாக நிற்கும் பாத்திரமாக இருந்தும், அவரைக் கண்ட நொடியில் ஏன் ராகுல தேரர் கதறி அழுதார், ஆனால் அந்தச் சந்தர்ப்பம் பலரது மனதைத் தொட்டது.

கடந்த ஏப்ரல் 30ம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இந்த உணர்வுபூர்வமான தருணம் இடம்பெற்றது. தேசிய நாமல் உயனவின் 33ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் ஆரம்பம் முதல் இன்று வரையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் வழங்கப்பட்ட ஒத்துழைப்பைக் கௌரவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். நிகழ்வு ஆரம்பமானதன் பின்னர் தேசிய நாமல் உயனவின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் மேடைக்கு வந்தது வரவேற்புரை மற்றும் விழாவின் நோக்கத்தை தெளிவு படுத்துவதற்காகும். அவர் தனது உரையை ஆரம்பித்து சிறிது நேரம் சென்றிருந்த போது மூத்த பத்திரிகை ஆசிரியர் எட்மன்ட் ரணசிங்க தனது மகள் மற்றும் மருமகனுடன் விழா மண்டபத்தினுள் பிரவேசித்தார். அச்சந்தர்ப்பத்தில் வனவாசி ராகுல தேரர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அவரது இரு கண்களும் கண்ணீர் சிந்தியதோடு, சில வினாடிகள் செல்லும் வரைக்கும் அவரால் பேச முடியாமல் போனது. அந்நேரத்தில் அங்கிருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டது எட்மன்ட் ரணசிங்க என்பவர் தற்போது இந்நாட்டில் இருக்கும் மூத்த பத்திரிகை ஆசிரியராக ஊடகவியலாளர்களால் பெரிதும் போற்றப்படுபவர் என்பதனாலாகும். மேடையிலிருந்து இறங்கி வந்த வனவாசி ராகுல தேரர் எட்மன்ட் ரணசிங்கவுக்கு அருகில் வந்ததோடு, எட்மன்ட் ரணசிங்க ஆசனத்தில் அமர்ந்தது அதுவரைக்கும் விழாவினை அலங்கரித்த ஒளி விளக்குகளில் ஔிராமல் இருந்த ஒளி விளக்கையும் ஒளிரச் செய்ததன் பின்னராகும். எட்மன் ரணசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ராஹூல தேரர் ஆகியோரின் மரியாதை, வாழ்த்துக்கள் மற்றும் சபையில் ஊடக நண்பர்களிடமிருந்து கிடைத்த மரியாதையையும் எட்மண்ட் ரணசிங்க தனது வழமையான மென்மையான குரலில் ஏற்றுக்கொண்டதோடு, மேடைக்கு சென்றதைத் ​ெதாடர்ந்து வனவாசி ராகுல தேரர் மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார்.

“இன்று நாமல் உயன உயிர்பெற்றிருப்பதும், நான் உயிர் வாழ்வதும் எட்மன்ட் ரணசிங்கவினாலாகும். இந்த தேசியப் பணியின் தலைவர் அவரே. திவயின பத்திரிகையில் நாமல் உயன தொடர்பில் முதலாவது கட்டுரையைப் பிரசுரித்து அவர்தான்.” என வனவாசி ராகுல தேரர் தனது மனம் நிறைந்த வாழ்த்துகளை எட்மன்ட் ரணசிங்கவுக்கு தெரிவித்தார்.

தேசிய நாமல் உயனவுக்கும் வனவாசி ராகுல தேரருக்குமிடையில் பிரிக்க முடியாத உறவு இருக்கின்றது. அதே அளவிலான ஆழமான பிணைப்பு தனக்கும் ஊடகங்களுக்குமிடையில் இருக்கின்றது என்பது தேரரின் நம்பிக்கையாகும். நாமல் உயன 33 வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதற்காக ஆதரவளித்த அனைத்து ஊடகங்களையும் கௌரவித்து நன்றிகளைத் தெரிவிப்பதற்கு அவர் எண்ணியது அதனால்தான். இந்த விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்மண்ட் ரணசிங்கவின் வருகையினால் அந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டது ஏன் என நாம் தேரரிடம் வினவினோம்.

“எட்மண்ட் ரணசிங்க என்பவர் இந்நாட்டின் மூத்த மற்றும் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியராகும். அமைச்சர்களிடமிருந்தும், அரச அனுசரணையினாலும் நாமல் உயனவுக்காக அனைத்தும் கிடைத்த போதிலும் அவர் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பை என்னால் ஒருபோதும் மறந்து விட முடியாது. ஆரம்பத்திலிருந்தே எனக்கு உண்பதற்கு அரிசி, சீனி, தேயிலை, தேங்காயிலிருந்து அனைத்தையும் கொண்டு வந்து தந்தது அவரேயாகும். அவரது வயோதிப காலத்தில் அவர் இந்த விழாவுக்கு வருவது எனக்கு ஒரு அரசர் வருவதைப் போன்றிருந்தது. அவர் வருகை தருவதற்குச் சற்று தாமதமாகிய அந்த சிறிய நேரம் எனக்கு கஷ்டமாக இருந்தது. அந்தக் காலத்தில் அவர் சிங்கத்தைப் போன்று பெரும் ஆளுமையுடன் இருந்த ஒருவராகும். துறவியாக இருந்தாலும், வாழ்க்கை நிலையற்றது என்பதை நினைத்துப் பார்த்தபோது மிகுந்த வருத்தமும் வேதனையும் ஏற்பட்டது. அதனால்தான் அந்த நேரத்தில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். ஆரம்பம் முதலே இந்த தேசியப் பணிக்கு முட்டுக் கொடுத்த, என்னை வாழவைத்த, நான் தனிமையில், ஆதரவற்ற நிலையில் இருந்த போதெல்லாம் அடைக்கலமாக இருந்த, துன்புறுத்தல் அச்சுறுத்தல்கள் வந்தபோது எனக்கு வலிமை அளித்த ரணசிங்க மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பாக நிகழ்த்திய கௌரவிப்பு நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். அதற்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எட்மண்ட் ரணசிங்க இல்லாவிட்டால், நாமல் உயனவை நானும் இழந்திருப்பேன்” அந்த கடந்த காலத்தை நினைவுகூரும் ஒவ்வொரு முறையும் வனவாசி ராகுல தேரர் உணர்ச்சிவசப்பட்டார்.

“நான் சத்கோரலையில் வசிப்பவன். நான் பிறந்தது குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மிக அழகான சிறிய கிராமத்திலாகும். எனது தந்தை அந்த கிராமத்தின் கிராமசபை உறுப்பினர். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும், ஒரு இளைய சகோதரரும் இருந்தனர். இன்று அவர்களில் ஒருவரும் உயிருடன் இல்லை. எனக்கு நான்கு வயதாக இருக்கும் போது, ​​என் தாய் இறந்துவிட்டார். தந்தை எங்களைக் கவனிக்க ஒரு வளர்ப்புத் தாயைக் கொண்டு வந்தார். கிராமத்தில் நாங்கள் குடும்பமாக இருந்தாலும், அதன் பிறகு எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அதனால்தான் எனக்கு பத்து வயதாக இருக்கும் போது துறவியானேன்.

சுரேகா நில்மினி இலங்கோன் தமிழில்- எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division