Home » 2024 Microsoft Sri Lanka Imagine Cup வெற்றியாளர்கள்

2024 Microsoft Sri Lanka Imagine Cup வெற்றியாளர்கள்

by Damith Pushpika
April 21, 2024 6:25 am 0 comment

2023 டிசம்பர் மாதம், Microsoft ஸ்ரீ லங்காவினால் AI ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வடிவமைப்பதற்கு வலுவூட்டும் பிராந்திய Imagine Cup போட்டி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்ததுடன், அவற்றில் HearMe, DevRelax அணிகள் மற்றும் Autumn அணி ஆகியன Microsoft Sri Lanka Imagine Cup இன் பிராந்தியமட்ட வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து Imagine Cup Global அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக HearMe மற்றும் DevRelax ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக முன்னேற்றம் கண்டுள்ள 19 அணிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அணிகள் உள்ளமையால் அது இலங்கையைப் பொறுத்தமட்டில் மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது.

மூன்று பிராந்திய வெற்றியாளர்களுக்கும் Microsoft இலங்கை அலுவலகத்துக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதர அணியினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களின் புத்தாக்கங்களையும் பார்வையிட்டிருந்தனர். மேலும், தமது புத்தாக்கமான தீர்வுகள் பற்றி, Microsoft இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனீத் சந்தோஷ் மற்றும் Microsoft இலங்கை மற்றும் மாலைதீவுகள் முகாமையாளர் ஹர்ஷ ரன்தெனி ஆகியோருக்கும் விளக்கமளித்திருந்தனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division