Home » தவக்கால சிந்தனை: நம்பிக்கை, எதிர்நோக்குடனான வாழ்வு

தவக்கால சிந்தனை: நம்பிக்கை, எதிர்நோக்குடனான வாழ்வு

by Damith Pushpika
March 3, 2024 6:00 am 0 comment

தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசு கடவுளின் பிரசன்னமாகிய ஆலயத்திற்குள் (எருசலேம்) நுழைந்தபோது கோபம் கொள்கிறார்.

அவர் அங்கு பணப் பரிமாற்றம் செய்வோரையும் வாங்குவோரையும், விற்போரையும் காண்கிறார். அவர் அவர்களைத் வெளியே துரத்தி “என் தந்தையின் இல்லத்தை சந்தையாக்காதீர்கள்” என்கிறார்.

பலிக்காக மிருகங்கள் வாங்குவதையும், ஆலயப் பயன்பாட்டிற்காக உரோமைப் பணத்தினை யூதப் பணமாக மாற்றுவதன் தேவையினையும் இயேசு அறிவார். எது அவருக்கு கோபமூட்டியதென்றால் அவர்களின் வெளிவேடத்தனமாகும். அங்கு வழிபாட்டினை விட வியாபாரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களது சமயக் கடமையானது வெற்றுச் செயல்பாடாக மாறியது.

வெளிவேடத்தனம் நமது வாழ்விலும் உள்நுழைய முடியும். நாம் எல்லோரும் தூய ஆவியின் குரலுக்கு செவிசாய்த்து பதிலளிக்கும் கடவுளின் மக்கள், இயேசுவின் சீடர்கள் என்பதற்கு மேலாக, நமது சொத்து, பெருமை, ஏனைய விடயங்கள் குறித்து அதிக அக்கறை கொள்ள முடியும்.

இந்தத் தவக்காலத்தில் இயேசு நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார். சமயத் தலைவர்கள் அவரது செயலுக்கான அதிகாரத்திற்கான அடையாளம் கேட்கிறார்கள்.

அவரோ, “இவ்வாலயத்தை இடித்து விடுங்கள், மூன்று நாட்களில் கட்டியெழுப்புவேன்” என்கிறார். யோவான் நற்செய்தியாளர், இயேசு தமது உடலாகிய ஆலயம் குறித்து பேசுவதாகக் கூறுகிறார். இயேசுவே அடையாளமாவார்.

இத் தவக்காலத்தில் எது முக்கியமானதோ அதிலே மனதைச் செலுத்துமாறு இயேசு நம்மைக் கேட்கிறார். அதாவது, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்பனவற்றில் வளர்ந்து, அதனூடாக ஒவ்வொரு நாளும் கடவுளை ஆவியிலும், உண்மையிலும் வழிபடுவோம்.

-அருட்தந்தை நவாஜி (திருகோணமலை மறைமாவட்டம்)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division