16 ஆவது ஆண்டு எடிசன் திரை விருது நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. அந்நிகழ்விற்கான தேர்வுப் பட்டியல் கடந்த ஆண்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த நடிகர் தேர்வுப் பட்டியலில் மாஸ் ஹீரோ வரிசையில் ரஜினிகாந்த், விஜய், அஜித், விஷால் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
சிறந்த நடிகருக்கான தேர்வுப் பட்டியல் வரிசையில் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, ராகவா லோரன்ஸ், சித்தார்த் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும் உலகத்தமிழர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை தேர்ந்தெடுக்க வசதியாக எடிசன் அவார்ட்ஸ் செயலியில் மற்றும் www.edisonawards.in என்ற வலைதளம் மூலமாகவும் வாக்குகளை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் அறியும் வகையில் தினசரி நாளேடு பண்பலை சமூக ஊடகங்கள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டு வாக்குகளை பெற்று வருவதாக எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
மேலும், தமிழ் ரசிகர்கள் தாங்கள் வாக்களித்த நடிகர், நடிகைகளை எடிசன் விருதில் ரெட் கார்பெட்டில் நடக்கும் நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் அறியும் விதத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள சமூக ஊடகங்கள் IPTVகள் மூலமாக காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு +6016 6167708 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.