பிரபல இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் ரொமான்ஸுடன் கூடிய புகைப்படங்கள் ப்ரியாவின் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் நடித்த ’தெறி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதன் பின்னர் ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார் என்பதும் இதையடுத்து அவர் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய பின்னர் பான் இந்திய இயக்குனர் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் குறித்த கதை விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரியா அட்லீ மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அட்லி மற்றும் ப்ரியா கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமாகி 10 வருடங்கள் ஆனாலும் இன்னும் ரொமான்ஸ் குறையவில்லை என இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவு ஆகி வருகிறது.