Home » நாம் வாழ்வது இந்தியாவிலா பாகிஸ்தானிலா ?

நாம் வாழ்வது இந்தியாவிலா பாகிஸ்தானிலா ?

ஹர்ஷிகா ஆவேசம்

by Damith Pushpika
April 28, 2024 6:56 am 0 comment

பிரபல நடிகை தங்களுக்கு நேர்ந்த ஒரு கொடூரமான சம்பவத்தை பதிவு செய்து நாம் வாழ்வது இந்தியாவிலா? அல்லது பாகிஸ்தானிலா? என ஆதங்கமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரை உலகின் பிரபல நடிகை ஹர்ஷிகா, இவருடைய கணவர் புவன் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்று விட்டு காரில் அமர்ந்ததாகவும், காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது இரண்டு பேர் வந்து எங்கள் மீது கார் மோதிவிடும் என்பதால் ரிவர்ஸ் எடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

காரை நாங்கள் ரிவர்ஸ் எடுக்கவில்லை என்று தனது கணவர் கன்னடத்தில் கூறிய போது திடீரென அங்கு 20 பேர் கூடி தனது கணவரிடம் தகராறு செய்ததாகவும், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஹிந்தி மற்றும் உருது பேசினார்கள் என்றும், கர்நாடக மாநிலத்தில் கன்னடத்தில் பேசியது தவறா என்றும் கூறிய ஹர்ஷா, இதனை அடுத்து எங்களுக்கு தெரிந்த இன்ஸ்பெக்டரிடம் பேசிய போது தான் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.

நமது சொந்த நாட்டில் வாழ்வதற்கே பயமாக இருக்கிறது, நாம் இந்தியாவில் தான் வாழ்கிறோமா? அல்லது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானி வாழ்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது, பிரச்சனையே அப்படியே விட்டுவிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் எங்களை போன்று வேறு யாருக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது என்பதற்காக தான் இந்த பதிவை செய்கிறேன், இருப்பினும் இது குறித்து நாங்கள் போலீசில் புகார் செய்யவில்லை, பொலிஸார் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division