நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த மலையாள படமான காதல் – தி கோர் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டது. மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் நடிகர் மம்மூட்டி உடன் இணைந்து முதல்முறையாக நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் மலையாள படமான காதல் தீ கோர் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி காதல் – தி கோர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி மற்றும் ஜோதிகா உடன் இணைந்து லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி, சுதி கோழிக்கோடு, அனகா அக்கு உள்ளிட்டோரும் காதல் – தி கோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து காதல் – தி கோர் திரைப்படத்தில் கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, காதல் – தி கோர் படத்திற்கு மேத்யூஸ் புலிக்கண் இசையமைக்கிறார்.
மம்மூட்டி – ஜோதிகா நடித்த முதல் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
367
previous post