சோபிதா துலிபாலா தன்னை அழகாக புரிந்து கொண்டிருப்பதாகவும், அவருடன் சேர்ந்து புது வாழ்க்கையை துவங்க காத்திருப்பதாகவும் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
சோபிதா துலிபாலாவுடனான திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா.நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண சடங்குகள் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா. அவர் கூறியிருப்பதாவது, சோபிதாவுடன் சேர்ந்து புது வாழ்க்கையை துவங்க காத்திருக்கிறேன். அவர் என்னை நன்றாக புரிந்து கொள்கிறார். என்னுள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புகிறார். இது ஒரு அற்புதமான பயணமாக இருக்கப் போகிறது என்றார்.நாக சைதன்யா மேலும் கூறியதாவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் எங்களின் திருமணம் நடக்கும். அந்த இடத்திற்கும், எனக்கும் ஸ்பெஷல் சென்டிமென்ட் இருக்கிறது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருக்கும் என் தாத்தாவின் சிலைக்கு முன்பு திருமணம் நடக்க வேண்டும் என என் குடும்பத்தார் முடிவு செய்திருக்கிறார்கள். தாத்தாவின் ஆசியுடன் திருமணம் நடக்கும் என்றார்.சோபிதா துலிபாலா வீட்டில் திருமண சடங்குகள் துவங்கிவிட்டது. மஞ்சள் இடிக்கும் சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சோபிதா. தன் திருமணத்திற்கு டிசைனர் சேலை அணியாமல் உள்ளூரில் நெசவு செய்யப்பட்ட சேலையை அணியப் போகிறாராம். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலரும் தான் கலந்து கொள்ளப் போகிறார்கள். நாக சைதன்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து சோபிதாவை காதலித்து பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இந்த திருமண வாழ்க்கை கடைசி வரை நிலைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. குடும்பம், பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ காத்திருக்கிறார் சோபிதா துலிபாலா என்பது குறிப்பிடத்தக்கது.