ARYA AADHI INTERNATIONAL MOVIES தயாரிப்பில் இயக்குனர் மஞ்ஜித் திவாகர் இயக்கும் திரைப்படம் “காமா”. இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு அண்மையில் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இத்திரைப்படத்தில் RKசுரேஸ், அஜய் வாண்டையர், ஜனனி, சுவஸ்திகாVJ, அப்புக்குட்டி, KCபிரபாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தின் பாடல்களை “தப்பெல்லாம் தப்பே இல்லை”, “ஐயோசாமி நீ எனக்கு வேணாம்” பாடல் புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதுகின்றார்.
இத்திரைப்படத்தின் ஊடாக “ஐயோசாமி” பாடல் புகழ் இலங்கை இசையமைப்பாளர் சனுக்க விக்கிரமசிங்க தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். சனுக்க இந்திய திரைப்படத்துக்கு இசையமைக்கும் முதல் சகோதர மொழியை சேர்ந்த இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் முதல் பார்வையை, தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான Rk சுரேஷ் வெளியிட்டு வைத்தார்.