தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலில் பவதாரிணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோவில் இடை இடையே வரும் சில காட்சிகளில் விஜய் மற்றும் சினேகாவின் கெமிஸ்ட்ரி காட்சிகள் இடம் பெற்றிருந்தது சூப்பராக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டினர்.
இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த பாடலின் வீடியோவை ரீகிரியேட் செய்துள்ளது. அதில் விஜய்க்கு பதிலாக பிரசன்னாவை வைத்து பிரசன்னா சினேகாவின் இரண்டு குழந்தைகளையும் அதில் இணைத்து ’சின்ன சின்ன கண்கள்’ பின்னணியுடன் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருவருக்கும் அனுப்பி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்த சினேகா, பிரசன்னா ’சின்ன சின்ன கண்கள்’ பாடலில் தங்கள் குடும்பமே இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வீடியோவை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் பிரசன்னா – சினேகா குடும்பம் க்யூட்டாக இருக்கிறது என்று கமெண்ட் பதிவாகி வருகிறது.