பிரஜ்வல் தேவராஜ், சம்பதா, ரமேஷ் இந்திரா, கேகே மாதா, மித்ரா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கரவாலி’. குருதத் கனிகா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை குரு தத் கனிகா இயக்குகிறார்.
‘கரவாலி’ என்பது பாரம்பரிய எருது விடும் பந்தயமான கம்பளாவை மையமாகக் கொண்டது. இதன் கதையும் அதைப் பின்பற்றியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சந்திரசேகர் பாண்டியப்பா இதன் கதையை எழுதியுள்ளார். அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சச்சின் பஸ்ரூர் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ‘அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ என்ற பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் இந்த டீஸர் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது ‘கரவாலி’!